கோலியை பக்கத்தில் வைத்துக் கொண்டே ரோகித் செய்த காரியம்.. வைரல் வீடியோ!

ரோகித், விராட் இருவரும் ஒரே அறையில், இவர்களுடன் ஜடேஜா செய்யும் அட்டகாசம்

By: Updated: August 10, 2019, 11:13:59 AM

trending video today :உலக கோப்பை தொடருக்கும் பின்பு இந்திய அணி குறித்து அதிகம் பேசப்பட்ட விவகாரம் இதுதான். கேப்டன் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கு கருத்து மோதல். இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள். கோலிக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், ரோகித் ஆதரவாக மற்றொரு புறம் ஒரு கூட்டம் தனித்தனியாக செயல்படுகிறது.

மொத்தத்தில் இந்திய அணீயே இரண்டாக பிரிந்து உள்ளது என ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்தன. இந்த நேரத்தில் தான் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மாவை un follow செய்தார். இதனால் விவகாரம் மேலும் பெரிதாகியது. மீடியாக்களீல் இதுக் குறித்த விவாதங்களும் அரங்கேறின.

இந்நிலையில், இவை எல்லாவற்றிருக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விராட் கோலி செய்தியாள சந்திப்பில் விளக்கம் ஒன்றை அளித்தார். அதில் “எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, இந்த விவகாரத்தில் யார் லாபம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை” என கூறினார்.

விராட் கோலியின் இந்த பதிலுக்கு பிறகு இதுத் தொடர்பான கேள்விகள் சற்று ஓரங்கப்பட்டு விட்டன. இந்நேரத்தில் ஐசிசி வெளியிட்டிடுக்கும் வீடியோ ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

எதிரும் புதிருமாக பேசப்பட்ட ரோகித், விராட் இருவரும் ஒரே அறையில், இவர்களுடன் ஜடேஜா செய்யும் அட்டகாசம். ரோகித்தும்- ஜடேஜாவும் சேர்ந்து Heads up விளையாட்டை விளையாடுகிறார்கள். அதாவது, ஜடேஜா செய்யும் ஆக்‌ஷன்கள் மூலம் ரோகித் அது எந்த கிரிக்கெட் வீரர் என்பதை கண்டுப்பிடிக்க வேண்டும் அவ்வளவு தான்.

முதலில் பும்ராவின் பெயர் வர அதை ஜடேஜா எளிதாக நடித்து காட்ட அதனை உடனே ரோஹித் கண்டுபிடித்து விடுகிறார்.அடுத்ததாக விராட் கோலி பெயர் அட்டையில் வருகிறது. அதனை ஜடேஜா நடித்து காட்டுகிறார்.

முதலில் கஷ்டப்படும் ரோகித் பின்பு, கோலி என் கண்டுப்பிடிக்கிறார், இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விராட்டும் சிரிக்கிறார். இந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Trending video today viral video today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X