Advertisment

இப்படியொரு அறிவு ஜீவிகளா? இணையமே கலாய்க்கும் அந்த 2 நண்பர்கள்.

வர்களை பார்த்து கையெடுத்து கும்மிட தான்.

author-image
WebDesk
Aug 06, 2019 11:54 IST
Trending video today

Trending video today

Trending video today : ஒட்டு மொத்த இணையவாசிகளும் 2 நண்பர்களின் அறிவு வீடியோவை கண்டு வியந்து போயியுள்ளனர்.இந்த இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்பதை நெட்டிசன்கள் ஆர்வத்துடன் தேடி வருகின்றனர். கிடைத்தால் அவர்களை பார்த்து கையெடுத்து கும்மிட தான்.

Advertisment

"அப்படி என்ன செய்து விட்டார்கள் இருவரும்" என்று கேட்கிறீர்களா? வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும். தெருவில் நின்றுக் கொண்டிருக்கும் கார் ஒன்றின் முன்சீட்டில் அமர்ந்துக் கொண்டிருக்கும் முதல் நபர் தனது கூளிங் கிளாசை தவறி கீழே விட்டு விடுகிறார். பின்பு அதனை எடுக்க குச்சி ஒன்றை பயன்படுத்துகிறார்.

ஓரளவுக்கு சிறிய குச்சியை கொண்டு அந்த கிளாசை எடுக்க தொடர்ந்து முயற்சிக்கிறார். ஏன் அதை வெளியில் வந்து எடுக்க கூடாதா என்று கேட்டால்? அவ்வளவு சோம்பேறி தனம் வேற ஏதுமில்லை. இப்படியே முயற்சி செய்யும் போது அந்த குச்சி கீழே விழுந்து விடுகிறது.

குச்சி கீழே விழுந்ததை பார்த்த அவரின் நண்பர், பின்னால் அமர்ந்துக் கொண்டிருப்பவர், உடனே காரை விட்டு வெளியே ஓடி போய் கீழே விழுந்த குச்சியை எடுத்து வருகிறார். நோட் இட்ஸ் பாய்ண்ட் கீழே விழுந்த குச்சியை மட்டும் தான். அதுகூடவே இருந்த கண்ணாடியை அல்ல

மீண்டும் தனது நண்பரிடம் குச்சியை கொடுக்கிறார், அவரும் கண்ணாடியை எடுக்க முயற்சிக்கிறார்.

இப்போது சொல்லுங்கள் இவர்கள் அறிவு ஜீவிகள் தானே? இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சில மணி நேரத்திலேயே இந்த வீடியோ வைரலனாது. வீடியோவை பார்த்த ஒருவர் கூட அந்த நண்பர்களை புகழாமல் இல்லை. நீங்க எப்படி?

#Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment