trending video youtube viral :நவம்பர் மாதம் வந்தவுடனே நோ ஷேவ் நவம்பர் ட்ரெண்டாகி விடும். நவம்பர் மாதம் முழுவதும் ஆண்கள் ஷேவ் செய்யாமல் இருப்பதே நோ ஷேவ் நவம்பர். எங்கே தொடங்கியது இந்த பழக்கம் என்று கேட்பவர்களுக்கு இதோ சின்ன விளக்கம்.
நோ ஷேவ் நவம்பர் என்றால் ஆண்கள் ஸ்டைலாக தாடி வளர்த்துக் கொள்வது மட்டுமில்லை. ப்ரோஸ்டேட் கேன்சர் குறித்த விழிப்புஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தான் நோ ஷேவ் நவம்பர் கைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்கள் ஒருமாதம் முழுவதும் கட்டிங், ஷேவிங்குக்கு பயன்படுத்தும் தொகையைச் சேமித்து வைத்துப் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களுக்கு நன்கொடையாக அளிப்பார்கள். புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் முடியை இழக்கத் தொடங்குவார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலும் உற்சாகம் தரும் நோக்கிலும் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தொடங்கப்பட்டதே இந்த நோ ஷேவ் நவம்பர்.
இதுவரை ஆண்கள் மட்டுமே பங்குக் கொண்ட இந்த நோ ஷேவ் நவம்பரில் பெண்களும் கலந்துக் கொள்ளுங்கள் என்று ஊக்கப்படுத்தும் வகையில் பிரபல நிறுவனம் மூவம்பர் என்ற பெயரில் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் பெண்கள் தங்களது உதட்டின் மேல் வளரும் மீசையை ஷேவ் செய்யாமல் வளர்கிறார்கள்.
எப்போதுமே பெண்களும் இந்த உதட்டின் மேல் ரோமம் பிரச்சனை அதிகம் பேசப்படும் ஒன்று. இனிமேல் நவம்பரில் அந்த ரோமத்தை நீக்காதீர்கள் வளருங்கள் நீங்கள் உங்களது பங்களிப்பை செய்யுங்கள் என்பதை ஊக்குவிக்கும் வகையில் ரேஷார் நிறுவனம் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லை அந்த ரோமத்தை ஏன் மறைக்க வேண்டும்? எந்த அவசியமும் இல்லை அது இயற்கை தான் என்பதையும் இந்த விளம்பரம் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தில் பெண்கள் ஷேவ் பிளேடுகளை தூக்கி போட்டு விட்டு மஸ்காரா மூலம் தங்களது மீசையை இன்னும் கருப்பாக காட்டுக்கிறார்கள்.
புது புரட்சியை ஏற்படுத்தும் இந்த விளம்பரம் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. பெண்கள் பலரும் இதனை வரவேற்றுள்ளனர்.