ஒரு நாள், இரண்டு நாள் இல்ல! மொத்தம் 18 மாசம்! பெற்றோர்களுக்கு விடிவு தந்த பள்ளிகள்... வைரல் மீம்கள்

எப்போது பள்ளி திறக்கும் என்று நீங்கள் அதிக ஆவலோடு காத்துக் கொண்டிந்த காலம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. உங்களின் மன குமுறல்களை எங்களால் நன்றாகவே புரிந்து கொள்ள இயலுகிறது.

எப்போது பள்ளி திறக்கும் என்று நீங்கள் அதிக ஆவலோடு காத்துக் கொண்டிந்த காலம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. உங்களின் மன குமுறல்களை எங்களால் நன்றாகவே புரிந்து கொள்ள இயலுகிறது.

author-image
WebDesk
New Update
school reopen, viral memes, tamil nadu schools

trending viral memes as children go back to school : ஒரு நாள், இரண்டு நாள் இல்ல… முழுசா ஐநூற்றி சொச்சம் நாட்கள், உங்களுடன், உங்களின் கை தொடும் தூரத்தில், உங்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் நீங்கள் வாழ்ந்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துகள். கொரோனா என்ன சொல்லிக் கொடுத்துருக்குமோ இல்லையோ ஆனா சகிப்புத் தன்மைய நிறைவே சொல்லிக் கொடுத்து இருக்கும். எப்போது பள்ளி திறக்கும் என்று நீங்கள் அதிக ஆவலோடு காத்துக் கொண்டிந்த காலம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. உங்களின் மன குமுறல்களை எங்களால் நன்றாகவே புரிந்து கொள்ள இயலுகிறது.

Advertisment
Advertisment
Advertisements

இந்த மனக்குமுறல்கள், குழப்பங்கள், கண்ணீர் கலந்த பெரும் மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுக்கு மட்டும் இல்லை பெற்றோர்களே, அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள், தாத்தா பாட்டிகள், உறவினர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணமாகவே இருந்திருக்கும். நீங்கள் இனி நினைத்து கவலைப்பட வேண்டியதெல்லாம் உங்களின் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் பற்றி தான்.

உங்களைப் போன்றே பரம ஆனந்தத்தில் திளைத்த நெட்டிசன்கள் இன்று மீம்களை போட்டு அதில் நீச்சலாடி வருகின்றனர். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்… மணி ஐந்தாகப் போகிறது… அப்பறம்! உங்கள் பிள்ளைகளை எப்போது ட்யூசனுக்கு அனுப்ப போகின்றீர்கள்?

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: