Trending Viral News Vicente Navarro Aparicio statue witnessed Valencia Atlanta match : மெஸ்டல்லா மைதானத்தில் நேற்று வாலென்சியா மற்றும் அட்லாண்டா அணிகளுக்கு இடையே நேற்று சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற்றது. கொரோனா வைரஸ் காரணமாக இண்டோர் கேமாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் என்னதான் கவலையுற்றிருந்தாலும், எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தானே. ஆனால் மெஸ்டல்லாவில் எந்த ஒரு பார்வையாளரும் இன்றி ஒரு போட்டியும் நடைபெறாது. அங்கே சிலையாகவே அமர்ந்திருக்கின்றார் வெறித்தனமான வாலென்சியா அணியின் ரசிகர்.
The Mestalla will never be truly empty.
The statue of Vicente Navarro was the sole spectator yesterday as Valencia host Atalanta...
Lost his sight in his 50s but still attended every game until he passed away, so the club made sure he would never miss another 1⃣.... The clip pic.twitter.com/Iw9SqXCHOs
— Juninho (@samjuninho) March 11, 2020
விசெண்ட் நவரோ வலான்சியாவின் தீவிர ரசிகர். ஆனால் தன்னுடைய 50வது வயதில் தன் பார்வையை பறிகொடுத்தார். ஆனால் ஒரு போதும் வலான்சியாவின் போட்டிகளை தவிர்ப்பதில்லை. தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் இது போன்று வந்து அமர்ந்து போட்டியை ரசிப்பது அவரது வழக்கம்.
மேலும் படிக்க : ”நான் அசிங்கமா இருக்கேன்” – கதறி அழும் குட்டிப் பாப்பா… ஆறுதல் தரும் ட்ரெஸ்ஸர்…
கடந்த ஆண்டு அவர் உயிரிழந்துவிட, தன் உற்ற நண்பனை இழந்தது போன்று வாடிய வாலென்சியா, விசெண்டிற்கு சிலை ஒன்றை செய்தது. உயிரோடு இருக்கும் போது எந்த இடத்தில் அமர்ந்து போட்டிகளை ரசிப்பாரோ அதே இடத்தில், 15வது வரிசையில் இருக்கும் 162வது இருக்கை, போட்டியை ரசிக்கும் படி சிலையை செய்துள்ளது அந்த டீம். நேற்று ஒற்றை வாடிக்கையாளராக இந்த மேட்சினை பார்த்தார் விசெண்ட். இந்நிகழ்வு பெரும் ஆறுதலாகவும், நெகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஃபுட்பால் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.