”மாதவிடாய் ஒரு தடை அல்ல” – 6000 மீட்டர் உயரமுள்ள பனிச் சிகரத்தில் “ட்ரெக்கிங்” செய்த பெண்

சிகரத்தை அடைய வேண்டிய நாளில் முதுகில் 8 கிலோவிற்கு உபகரணங்கள். அன்று நான் நடக்க வேண்டிய தூரமோ 16 மணி நேரம். இரவு 11.50 மணிக்கு நடக்க ஆரம்பித்தேன். அதிகாலை ஒரு மணிக்கு வலியுடன் நடக்க துவங்கினேன்.

Shreya Das 

Trending viral news : ப்ரீயட்ஸ் பொதுவாக, பொதுவெளியில் பேசவே தயங்கும் ஒரு டாபிக். ப்ரீயட்ஸ் என்றால் அது, இது, அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் வேறு. அதற்கு சற்றும் பொறுத்தமே இல்லாத காரணங்களையும், மூடநம்பிக்கைகளையும் இணைத்து இறுக்கி கட்டி வைத்தும் உள்ளது இந்த சமூகம்.

ஆனால் 26 வயது மதிக்கத்தக்க பிரபலமான ட்ராவல் ப்ளாகர் மற்றும் இன்ஸ்டகிராம் இன்ஃப்ளூயென்ஸருமான ப்ரக்ரிதி வர்ஷ்னே இந்த மூட நம்பிக்கைகளையும், காரணங்களையும் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் தகர்த்தெறிந்துள்ளார்.

சோலோவாக பயணம் செய்யும் பெண்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட செல்லப்பிள்ளை ப்ரக்ரிதி என்றே கூறலாம். ரோட் ட்ரிப்பில் துவங்கி ட்ரெக்கிங் என அனைத்து அட்வென்ச்சர் ட்ரிப்பையும் ஒரு கை பார்த்துவிடுவது அவருடைய வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் ஆமா தப்லம் என்ற நேபாளத்தில் இருக்கும் 6812 மீட்டர் உயரமுள்ள பனிச்சிகரத்தில் ட்ரெக்கிங் செய்யும் முடிவை, அதுவும் தனியாக ட்ரெக்கிங் செய்யும் முடிவை எடுத்தார் ப்ரக்ரிதி. ஆனால் தன்னுடைய மாதவிடாய் காலத்தில் வலிகளை எல்லாம் புறம் தள்ளி சாதித்துள்ளார் அவர்.

”என்னுடைய மாதவிடாய் காலம் அவ்வளவு வலி நிறைந்ததாக இருக்காது. என்னுடைய தோழிகள் கூறும்போது கேட்ட அனைத்து பிரச்சனைகளும் நான் ஆமா தாப்லாம் ஏறும் போது எனக்கு ஏற்பட்டது என்று கூறுகிறார் டெல்லியை சேர்ந்த அந்த சாகச விரும்பி. மூன்று வார மலையேற்ற பயணம் அது. நான் சிகரத்தை அடைய இருக்கும் இறுதி கட்டத்தின் போது எனக்கு ப்ரீயட்ஸ் ஏற்பட்டது. நான் என்னை அதற்கு தயார் நிலையில் வைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

உயரம் மற்றும் மன அழுத்தம் போன்றவை மாதவிடாய் சுழற்சியை மாற்றி அமைக்கும் என்று சொல்வார்கள். நான் நீண்ட நாள் இந்த இலக்கை அடைய காத்திருந்தேன். ஆனால் அது எனக்கு கொஞ்சம் மோசமான நாளாக மாறிவிட்டது.

சிகரத்தை அடைய வேண்டிய நாளில் முதுகில் 8 கிலோவிற்கு உபகரணங்கள். அன்று நான் நடக்க வேண்டிய தூரமோ 16 மணி நேரம். இரவு 11.50 மணிக்கு நடக்க ஆரம்பித்தேன். அதிகாலை ஒரு மணிக்கு வலியுடன் நடக்க துவங்கினேன். நான் கூட நீர் அதிகம் அருந்தாது தான் காரணம் என்று நினைத்தேன். பின்பு தான் வலி எதனால் ஏற்பட்டது என்று புரிந்தது.

இதற்கு அடுத்து நான் மேற்கொண்டு முன்னேறமாட்டேன் என்றே நினைத்து என்னுடைய கெய்டிடம் கூறினேன். ஆனால் 3வது முகாமில் 45 நிமிடங்கள் ஓய்வு எடுத்தேன். அது எனக்கு அடுத்த நான்கு மணி நேரத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு என்னை தயார்ப்படுத்த உதவியது என்றார் ப்ரக்ரிதி.

சானிட்டரி நேப்கின்கள், டேம்பான் என எதுவுமே என்னிடம் இல்லை. அனைத்தையும் பேஸ் கேம்பில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். என்னுடைய உடல் இன்று எனக்கு ஒத்துழைக்கவில்லை என்ற எண்ணத்தை நான் முதலில் தகர்த்தெறிந்துவிட்டு சிகரத்தின் உச்சியை நோக்கி பயணித்தேன். எவரெஸ்ட் மலைச்சிகரத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு அப்போது கிடைத்தது. மலைச்சிகரங்களில் இத்தகைய சூழலில் பயணிக்கும் போது எங்கும் நாப்கின்கள் அல்லது டெம்பான்களை அப்புறப்படுத்த இயலாது. அது சுற்றுச்சூழலுக்கு கேடாக முடிந்துவிடும். எனவே நான் மென்ஸ்டுரல் கப்பை இது போன்ற பயணங்களுக்காக பயன்படுத்துகிறேன் என்றும் அவர் கூறினார்.

என்னுடைய பலம் என்ன என்பதை நான் அறியவே எனக்கு இப்படியான ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அடுத்து நான் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்ல இருக்கிறேன். ஆம் தால்பம் எனக்கு ஒரு முன்முயற்சி என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral news woman scaled 6000 m mountain peak on her periods

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com