New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/Capture-1.jpg)
யானைகள் துவங்கி மிமி பூப்பா வரை எதையுமே அவர் விட்டு வைத்ததில்லை. சில புகைப்படங்களை பதிவு செய்து இது என்னவாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள் என்று நம்முடைய மூளைக்கு வேலை தர துவங்கிவிடுவார்.
trending viral photo : இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வானின் ட்விட்டர் பக்கத்திற்கு சென்றால் நாம் அறியாத இந்திய வனப்பகுதிகளின் உயிரினங்கள் குறித்து மிகவும் அரிய தகவல்களை புகைப்படங்களுடன் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவோம்.
யானைகள் துவங்கி மிமி பூப்பா வரை எதையுமே அவர் விட்டு வைத்ததில்லை. சில புகைப்படங்களை பதிவு செய்து இது என்னவாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள் என்று நம்முடைய மூளைக்கு வேலை தர துவங்கிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் மரக்கட்டை புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். வெறும் புகைப்படத்தைப் பார்த்தால் அது வெறும் சிறிய மரத்துண்டு போல தான் இருக்கும். ஆனால் இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் தகவல்கள் நம்மை பிரமிப்பிற்கு ஆளாக்கிவிடும்.
This is Common mime pupa. It just looks like a wooden piece. At this stage the creature has no defense system from birds & other insects, so it rely on deception. It camouflages & stays low. It pays, soon the pupa will become a beautiful & colorful butterfly. A lesson. pic.twitter.com/zQb1Wuj5Df
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 21, 2021
இதன் பெயர் காமன் மிமி பூப்பா. தன்னுடைய எதிரிகளிடம் இருந்து தன்னை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு நிறமாறி இருக்கிறது இந்த பூப்பா. camouflage என்ற நிலையில் இருக்கும் இது ஒரு பட்டாம்பூச்சியாக மாறும் என்றால் நம்மால் நம்பவே முடியாது. ஆனால் அது தான் உண்மை. ஒரு அழகான பட்டாம்பூச்சியாய் மாறுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் தருணம் தான் இந்த புகைப்படத்தில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.