இவருக்கு 80 வயதா? வைரலாகும் குஜராத் முன்னாள் முதல்வர் ”வொர்க் அவுட்” போட்டோக்கள்!

உடலும் ஃபிட் + உள்ளமும் ஃபிட் அப்படியென்றால் வாழ்க்கை செம்ம தூள் என்று ட்வீட் செய்துள்ளார் அவர்.

By: Updated: July 24, 2020, 01:49:56 PM

trending viral photos of 80-yr-old former Gujarat CM’s workout, gets praise on social media : கொரோனா நோயில் இருந்து மீண்டு வருபவர்களின் கதையும், மீள்பவர்களின் கதையும் நமக்கு நேர்மறை எண்ணங்களையே தருகிறது. இங்கே பாருங்கள் கொரோனாவை வென்ற குஜராத்தின் முன்னாள் முதல்வர் சங்கெர்சின் வகேலாவின் செயலை. 80 வயதான அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். வந்ததும் மிகவும் ஆரோக்கியமான செயல்களில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். ஜாங்கிங் மற்றும் எடை தூக்கும் செயல்களில் ஈடுபட்டு ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாக தற்போது பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : லடாக் : மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் இந்திய ராணுவம்

80 வயதாக இருந்தால் என்ன முடியும் என்ற துணிவே மக்களை இந்த பூமி வாழவைக்கிறது என்பதற்கு இந்த புகைப்படங்கள் உதாரணமாக இருக்கிறது.

 

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

1996 முதல் 1997 வரை குஜராத்தின் முதல்வராக பணியாற்றினார் வகேலா. அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இம்மாதத்தின் முதல் வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு காந்திநகரில் இருக்கும் தன்னுடைய இல்லத்திற்கு திரும்பிய அவர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்ட தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Trending viral photos of 80 yr old former gujarat cms workout gets praise on social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X