Trending viral video of 10-year-old makes ‘hug curtain’ to embrace grandparents : கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் பலரும் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாசத்திற்கு உரியவர்கள் அருகே இருந்தாலும் விலகியே இருக்கும் நிலை உருவாகியுள்ளது. கொரோனாவால் உயிரிழக்கும் நண்பர்களையோ உறவினர்களையோ தொட்டு கடைசியாக முத்தமிட்டு அரவணைத்து வழி அனுப்பி வைக்கவும் முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.
குழந்தைகளுக்கு தங்களின் பெற்றோர்கள் பாசத்தை போலவே அவர்களின் தாத்தா பாட்டியின் பாசமும் அவ்வளவு முக்கியமானது. ஒரு அரவணைப்பு தான் அனைத்தையும் மாற்றுமே. தன் பாட்டியை கட்டிக் கொள்ள இந்த 10 வயது பாப்ப செய்த காரியத்தை பாருங்கள். ஷவருக்கு பயன்படுத்தும் திரையையும், பசையையும் பயன்படுத்தி இந்த ”கட்டிப்புடி” திரையை உருவாக்கியுள்ளார் பெய்ஜ் என்ற அந்த குட்டி பாப்பா.
மேலும் படிக்க : தமிழகத்தில் கொரோனாவை விரட்டி அடித்த பகுதிகள் இவை தான் – சென்னையின் நிலையும் மாறும்
இந்த வீடியோவை அவருடைய தாயார் லிண்ட்ஸே தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து “பெய்ஜ் ஏற்கனவே யாரோ ஒருவர் தன்னுடைய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை அரவணைத்துக் கொள்ள இதே போன்ற போர்வை செட்-அப்பை பயன்படுத்தியிருந்தார்கள். அதை பார்த்த பெய்ஜ்ஜூம் தன்னுடைய உறவினர்களின் பெயர்களை எல்லாம் லிஸ்ட்-அவுட் எடுத்து, இது போன்ற கட்டிப்பிடி திரையை உருவாக்கியுள்ளார்.”
இதை பார்த்த நெட்டிசன்களும் அந்த சிறுமியின் அன்பில் உருகித்தான் போயிருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“