குவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை!

இன்று முடியும் இந்த அவல நிலை… தாயையும் பிள்ளையையும் பாச போராட்டத்தில் இப்படி தவிக்கவிடுகிறதே என மக்கள் கருத்து!

Nurse Sugandha Korikoppa in Quarantine
Nurse Sugandha Korikoppa in Quarantine

Nurse Sugandha Korikoppa : கொரோனா வைரஸை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. மருத்துவத்துறையில் இருப்பவர்கள் பலரும் தங்களின் உணர்ச்சிகளுக்கும் கடமைகளுக்கும் மத்தியில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் வாரக் கணக்காக மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள். சேவை ஒருபுறம் என்றாலும், தன்னால் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல் எண்ணமும் அவர்களை தனித்திருக்க வைத்திருக்கிறது.

11 நாட்களுக்கும் வீட்டிற்கு வராத அம்மாவை வரச்சொல்லி பாசப் போராட்டமே நடத்தியுள்ளார் 3 வயது குட்டிப்பாப்பா. கர்நாடகாவில் செவிலியராக பணியாற்றி வருபவர் சுகந்தா கோரிகொப்பா. ஒரு வாரம் மருத்துவமனையில் பணியாற்றிய அவர் தற்போது 14 நாட்கள் குவாரண்டைனில் இருக்கிறார். தன்னுடைய மகளை பார்த்து 11 நாட்கள் ஆகியுள்ளது.

மேலும் படிக்க : கொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன?

தாயையும் பிள்ளையையும் தனித்தனியாக பிரித்து வைத்து பார்க்க முடியாத சுகந்தாவின் கணவர் சந்தோஷ், தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை அழைத்து மருத்துவமனை வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சுகந்தா, மகளை கொஞ்சக் கூட முடியாமல், வாசலிலேயே நின்றுவிட்டார். ஆனால் அந்த குழந்தை அம்மா இங்கே வா… அம்மா இங்க வா என்று அழுது கொண்டே இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க : மோடி செய்யாததை செய்து முடித்த கொரோனா… தூய்மையடையும் கங்கை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of 3 years kid longing for her mother nurse sugandha korikoppa to return home

Next Story
யாரும் இதுவரை பார்த்திராத ஐஸ்வர்யா ராய்: வீடியோ வைரல்aishwarya rai bachchan video viral, 23 years ago aishwarya rai bachchan acting unseen movie, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் வீடியோ வைரல், வைரல் வீடியோ, video viral, radheshyam sitharam, anees bazmee directed movie, யாரும் இதுவரை பார்த்திராத ஐஸ்வர்யா ராய், வீடியோ வைரல், aishwarya rai acting movie, bollywood latest news, bollywood viral video, aishwarya rai, iruvar, director manirathnam, aishwarya rai bachchan news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com