கெத்தா, தைரியமா, தில்லோட இந்த நாய் போடுற சண்டை இருக்கே! ப்ப்ப்பா..

வாழ்க்கைல நாம எத்தனையோ சண்டைகள பாத்திருப்போம் ஆனா இந்த சண்டைய நெனைக்கும் போது! முடியலப்பா

Trending viral video of a brave dog takes on his enemies : நாய் வளர்க்கும் நண்பர்களுக்கே தெரியும் அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று. ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு ரகம் தான். நல்ல நண்பன், உண்மையான பாசக்காரன் என்பதையும் தாண்டி, மற்ற நாய்களுடன் சண்டை என்று வந்துவிட்டால், நாம் அனைவரும் ஒதுங்கி தான் நிற்க வேண்டும். ஏன் என்றால் எப்போது அந்த நாய் நம்மை கடிக்க வரும் என்பது தெரியாது.

ஜப்பானை சேர்ந்த டிக்டாக் பயனர் நெரோடைஸ் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மூன்று நாய்கள் மிகவும் பயங்கரமாக, ஆக்ரோசமாக சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றன. ரௌத்திரம் படம் பார்த்தால் தெரியும், நாங்க எல்லாரும் ஹார்ஷா போய் சத்தம் போட்டுட்டு வந்துருவோம் மாதிரி தான் இந்த நாய்களின் சண்டையும்.

@nerodiceここに来る勇気がありますか?????????##柴犬 ##愛犬 ##tikdog ##犬が反応する音♬ オリジナル楽曲 – nerodice1

மூன்று நாய்களும் அவர்களின் எஜமானர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு நாய் தன்னுடைய கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியின் இறுக்கத்தையும் மீறி சண்டை போட முனைப்போடு செல்கிறது. ஆனால் அங்கே ஒரு குட்டி நாய் என்ன செய்கிறது தெரியுமா, மிகவும் பாதுகாப்பாக, தன் எஜமானரின் காலை கவ்விக் கொண்டு பவ் பவ் பவ் என்று குரைத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவு பயம் இருந்தா எதுக்கு டா நீ சண்டைக்கு போறன்னு நமக்கே கேட்க தோணுது. ஆனாலும் கூட அந்த நாய் அவ்ளோ க்யூட். வாழ்க்கைல நாம எத்தனையோ சண்டைகள பாத்திருப்போம் ஆனா இந்த சண்டைய நெனைக்கும் போது! முடியலப்பா. சிரிச்சி எஞ்சாய் பண்ணுங்க இந்த வீடியோவை பாத்து. இது சம்பந்தமா ஏதாவது கருத்து சொல்ல ஆசைப்பட்டாலும் கமெண்ட் பாக்ஸில் தெரிவிங்க.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close