New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/cats-18.jpg)
யானைகளின் மீது இருக்கும் பேரன்பின் காரணமாக தங்களின் தேயிலை ரகத்தில் ஒன்றுக்கு “டஸ்கர் ப்ளாக் ” என்று பெயரிட்டுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
viral video of an elephant herd : மேற்கு வங்க மாநிலம், டார்ஜ்லிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது நக்சல்பாரி தேயிலை தோட்டம். மலைப்பாங்கான இடமாக இருந்தாலும் பல்லுயிர் தன்மையால் மிகவும் செறிவுற்ற பகுதியாக இந்த பகுதிகள் உள்ளது. சீனாவில் இருந்து கொண்டவரப்பட்ட தேயிலைகளை 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இங்கு வளர்த்து வருகின்றன்னர். ஜல்பைகுரி நவாபிற்கு சொந்தமான 33 தேயிலை தோட்டங்களில் ஒன்று தான் நக்சல்பாரி தேயிலை தோட்டம்.
இந்த தோட்டத்தில் அடிக்கடி யானைகள் வந்து செல்வது வாடிக்கையான ஒன்றாக அமைந்துவிட்டது. சமீபத்தில் 30 யானைகள் ஒரே இடத்தில் வந்து உணவு சாப்பிட்டு, அங்கேயே தூங்கி, அருகிலேயே தங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த யானைகள் தேயிலை தோட்டத்திற்கு வந்து உணவு உண்டுவிட்டு திரும்பிச் செல்லும் வரை இதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேயிலை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
Elephant herds are now spending nights & even entire days here. Our elephant pool and streams provide ample water, there are plenty of trees and grasses for forage, and because they feel safe, some even lie down for a nap! #elephantconservation #coexistence #nuxalbaritea #itseasy pic.twitter.com/uVjRrwVmLD
— Nuxalbari Tea Estate (@NuxalbariTea) June 22, 2021
இன்று காலை வெளியிட்ட இந்த வீடியோவை கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு யானைகளின் மீது இருக்கும் பேரன்பின் காரணமாக தங்களின் தேயிலை ரகத்தில் ஒன்றுக்கு “ப்ளாக் டஸ்கர்” என்று பெயரிட்டுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். யானைகளுக்கும் வன விலங்குகளுக்கும் பாதுகாப்பான தேயிலை தோட்டம் என்று பெயர் பெற்ற இந்த நக்சல்பாரி தேயிலை தோட்டத்தில் பெரும்பாலான நிர்வாக பணிகள் பெண்களின் கையில் உள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.