Viral Video : தாய் பாசத்துக்கு ஏதுங்க ஈடு? தொட்டியில் சிக்கிய யானைக் குட்டியை குடும்பத்துடன் மீட்க முயன்ற அம்மா

அந்த குட்டியை பத்திரமாக மீட்டு வெளியே விட மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டே அந்த யானை அங்கிருந்து ஓடிவிட்டது.

அந்த குட்டியை பத்திரமாக மீட்டு வெளியே விட மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டே அந்த யானை அங்கிருந்து ஓடிவிட்டது.

author-image
WebDesk
New Update
Elephant viral videos

Trending viral video of an elephant herd rescues baby elephant : கென்யாவில் அமைந்துள்ளது ஷெல்ட்ரிக் காப்பகம். தனித்துவிடப்பட்ட யானைகளுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது இந்த காப்பகம். பிறந்து 24 மணி நேரம் கூட ஆகாத குட்டி யானை ஒன்று அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் குடிக்க வந்து அதில் சிக்கிக் கொண்டது. சில மணி நேரங்களில் அதனை தேடிக் கொண்டு தாயும் மற்ற உறவினர்களும் அந்த குட்டி தொட்டியை சூழ்ந்து அந்த குட்டியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Advertisment

இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஷெல்ட்ரிக் காப்பகம். இந்த வருடத்தின் துவக்கத்தில், காப்பக ஊழியர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு வெளியே ஏற்பட்ட சலசலப்பை கண்டு அங்கே சென்று பார்த்த போது ஒரு யானைக் கூட்டம் தண்ணீர் தொட்டிக்குள் இங்கும் அங்குமாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இது போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதி சிந்துத்து நாங்கள் தண்ணீர் தொட்டிகள் கட்டியிருந்தோம். இருந்தும் அனைத்தையும் மீறி அந்த குட்டியானை அதற்குள் தவறி விழுந்துவிட்டது. அந்த யானைக் குடும்பத்தினரின் மிகப்பெரிய உதவியும் கூட பலனளிக்காத நிலையில் குழுவினர் உடனே சென்று அந்த குட்டியை பத்திரமாக மீட்டு வெளியே விட மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டே அந்த யானை அங்கிருந்து ஓடிவிட்டது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: