New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/cats-12.jpg)
9 மாதமே ஆன இக்குட்டி யானையின் செயல் சமூக வலைதளங்களில் அனைவரையும் “என்ன ஒரு அறிவு” என்று வியக்க வைத்திருக்கிறது.
baby elephant pumping a tube well to drink water : யானைகளுக்கு நுண் உணர்வு மிகவும் அதிகம். அது இயல்பாக, வேகமாக அனைத்தையும் கற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் பல காலங்களில் நிரூபித்து உள்ளனர். அதற்கு ஏற்ற வகையில் பல சூழல்களில் நாம் அது தொடர்பான வீடியோக்களையும் செய்திகளையும் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.
அப்படியான ஒரு வீடியோவை தான் தற்போது நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தூர் பகுதியில் அமைந்துள்ளாது ஜல்தபாரா என்ற காட்டுப் பகுதி. அங்கு கோடை தாக்கம் தாங்க முடியாமல் சுற்றித் திரிந்த குட்டி யானை ஒன்று, அங்கிருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிகுழாயில், பம்பை அடித்து தண்ணீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
baby elephant pumping a tube well to drink from it at the Jaldapara forest in Alipurduar district of Bengal! #nature pic.twitter.com/tK4fPBGsK6
— HGS Dhaliwal (@hgsdhaliwalips) June 14, 2021
9 மாதமே ஆன இக்குட்டி யானையின் செயல் சமூக வலைதளங்களில் அனைவரையும் “ச்ச்சோ ஸ்வீட்” சொல்ல வைத்திருக்கிறது. ஜல்தபாரா தேசிய பூங்கா கிழக்கு இமயமலை சரிவுகளில் அமைந்துள்ளது. இப்பகுதி 1941ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தண்ணீர் பிடிக்கும் செயலை பார்த்து கற்றுக் கொண்ட யானை தன் பங்கிற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.