New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/dog_0.jpeg)
வீடியோவை ஷேர் செய்த கொஞ்ச நேரத்தில் 13200 நபர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
Trending viral video of dog watching the match on TV : கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு உலக நிகழ்வுகள் முற்றிலுமாக நடைபெறாமல் இருக்கிறது. குறிப்பாக விளையாடு உலகில் எந்த விதமான போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது பலருக்கும் வருத்தத்தை அளிக்கும் விதமாக அமைந்தது. இந்நிலையில் 10 நொடி வீடியோ க்ளிப் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
We all miss sports. But maybe not as much as this good boy.
Dogs, bruh... pic.twitter.com/PInjrYOUhF
— Rex Chapman???????? (@RexChapman) July 30, 2020
நாய் ஒன்று தன்னை வளர்ப்பவருடன் அமர்ந்து ஜோராக விளையாட்டு போட்டி ஒன்றை பார்த்து வருகிறது. திரையில் விளையாட்டு வீரர்கள் இங்கும் அங்கும் ஓட, ஓவர் குஷியான நாயும் இங்கும் அங்கும் ஆடிக் கொண்டும் ஷோஃபாவில் துள்ளிக் குதித்தும் ஆடி வருகிறது. ஆனால் சில நொடிகள் ஓவராய் துள்ள ஷோஃபாவில் இருந்து கீழேயே விழுந்துவிட்டது இந்த செல்ல நாய்க்குட்டி.
பார்க்க கொஞ்சம் பரிதாபமாக இருந்தாலும் கூட, விளையாட்டின் மீது அதற்கு இருக்கும் ஆர்வம் தான் நம்மை மேலும் கவர்கிறது. வீடியோவை ஷேர் செய்த கொஞ்ச நேரத்தில் 13200 நபர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மூன்றரை லட்சம் நபர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.