Advertisment

அட கொஞ்சம் நேரம் நின்னு பேசுங்க பாஸ்... மனிதர்களை கவரும் முயற்சியில் டால்பின்கள் - வைரல் வீடியோ

ரிங்கோ விளையாட டால்பின்கள் ஆரம்பித்த போது நாங்கள் எங்களின் பணிகளை நிறுத்திவிட்டு அதனை பார்க்க துவங்கிவிட்டோம். வாழ்நாளில் இது போன்ற அதிசயங்கள் எப்போதாவது தான் நிகழும்

author-image
WebDesk
New Update
trending viral video of dolphins, viral video, trending viral videos

Trending viral video of dolphins impress paddleboarders : டால்பின்கள் மிகவும் இயல்பாக பழகும் கடல் உயிரினம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அடிக்கடி மனிதர்கள் கடலில் நடமாடும் பகுதிகளுக்கு வந்து மனிதர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் உயிரினமாகவும் அது இருக்கிறது.

Advertisment

தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஸ்வானேஜ் விரிகுடாவில் ஒரு சிலர் பெடலிங் செய்து கொண்டிருக்கும் போது தொடர்ந்து வந்து பெடலிங் பயிற்சியில் ஈடுபட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது டால்பின்கள்.

ஃபிலிப் பால்மர் என்பவரால் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிங்கோ விளையாட டால்பின்கள் ஆரம்பித்த போது நாங்கள் எங்களின் பணிகளை நிறுத்திவிட்டு அதனை பார்க்க துவங்கிவிட்டோம். வாழ்நாளில் இது போன்ற அதிசயங்கள் எப்போதாவது தான் நிகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.

42 நொடிகள் ஓடிய இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய துவங்கியுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment