Viral Video: ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி! திக் திக் நிமிடங்கள்!

கர்நாடகாவில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் நிலைதடுமாறி, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த இளைஞரை இழுத்து கீழே தள்ளிய சம்பவத்தின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. முதியவரும், இளைஞரும் ரயிலுக்கும் பிளாட்பாரத்தில் விழுந்ததால், காயமின்றி உயிர் தப்பினர்.

கர்நாடகாவில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் நிலைதடுமாறி, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த இளைஞரை இழுத்து கீழே தள்ளிய சம்பவத்தின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. முதியவரும், இளைஞரும் ரயிலுக்கும் பிளாட்பாரத்தில் விழுந்ததால், காயமின்றி உயிர் தப்பினர்.

author-image
WebDesk
New Update
viral-video-of-elderly-man

ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி! திக் திக் நிமிடங்கள்!

இந்தியாவைப் பொறுத்தவரையில் ரயில் போக்குவரத்து மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. நாள் முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ஓடும் ரயிலில் ஏறமுயன்று, ரயிலில் தொங்கியபடியும் பலவிதமான பரபரப்பு வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவதுண்டு. அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இந்த சம்பவமானது கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒருரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ரயிலானது பிளாட்பாரத்திலிருந்து கிளம்ப தொடங்கியது.  இதையடுத்து வயதான முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்கிறார். பின் அந்த ரயிலிலும் ஏறிவிடுகிறார். அந்த முதியவர் ஓடும் ரயிலில் ஏறியது மட்டுமல்லாமல், நிலைதடுமாறி ரயிலில் தொங்கியபடி பயணித்துக் கொண்டிருந்த, மற்றொரு இளைஞரையும் கீழே பிடித்து இழுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்கள் இருவரும் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடுக்கில் சிக்குவதுபோல வீடியோவில் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்கும் காயமின்றி உயிர் தப்பினர். 

Advertisment
Advertisements

இந்த விபத்தில் அந்த முதியவர் மீதுதான் தவறு உள்ளது என்று இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

Viral Video Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: