அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை; கோத்தகிரியில் பரபரப்பு
மிகவும் பொறுமையாக இந்த சூழலை சமாளித்த நடத்துநர் மட்டும் ஓட்டுநருக்கு மக்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒன்றும் செய்யாது, சிறிது நேரத்தில் அமைதியாக இங்கிருந்து சென்றுவிடும் என்று தொடர்ந்து நம்பிக்கை கூறி வந்தனர் அவர்கள்.
Trending viral video of elephant chased government bus : இன்று காலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது அரசு பேருந்து ஒன்று. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்த பேருந்தினை தடுத்து நிறுத்திய காட்டு யானை ஒன்று, அந்த பேருந்தை மேற்கொண்டு நகரவிடாமல் துரத்திக் கொண்டு வந்தது. சிறிது தூரம் பேருந்தை பின்னால் இயக்கி வந்த ஓட்டுநர், சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தினார்.
Advertisment
முன்னேக்கி வந்த யானை பேருந்தின் கண்ணாடிகளை மூர்க்கமாக தாக்கி உடைத்தது. அந்த நேரத்தில் பேருந்தின் நடத்துநர், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரையும் பொறுமையாக, அமைதியாக பின்னால் வரக் கூறினார். அனைத்து பயணிகளும் தங்களின் உடமையை எடுத்துக் கொண்டு பின்னால் வரும் வரை அமைதியாக காத்திருந்தார் ஓட்டுநர்.
சாலையின் இரு பக்கமும் மாறி மாறி நடந்த அந்த யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை முற்றிலுமாக சேதப்படுத்தியது. பயணிகள் அனைவரும் பின்னால் சென்ற பிறகு, ஓட்டுநர் தன்னுடைய இருக்கையில் இருந்து வெளியேறி பின்னால் வந்து நின்று கொண்டார். சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த யானை அங்கிருந்து நகர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் வைரலாக பரவி வருகிறது.
மிகவும் பொறுமையாக இந்த சூழலை சமாளித்த நடத்துநர் மட்டும் ஓட்டுநருக்கு மக்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒன்றும் செய்யாது, சிறிது நேரத்தில் அமைதியாக இங்கிருந்து சென்றுவிடும் என்று தொடர்ந்து நம்பிக்கை கூறி வந்தனர் அவர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil