Trending viral video of elephant In Kerala uses trunk to help calf over barrier : தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது மலப்புரம் பகுதியின் நடுக்கனி சுரம். இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் மிக அதிகம். சாலையில் கீழ் புறத்தில் இருந்து மேல்புறம் நோக்கி மூன்று யானைகள் சென்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த பகுதியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள சென்ற 4 நண்பர்களில் ஒருவரான அனீஷ் கட்டா இந்த காட்சியை படமாக்கியுள்ளார். யானைகள் சாலையை கடப்பதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
மேலும் படிக்க : ஒரே ஒரு கேம் தான் இன்ஸ்டால் செஞ்சான்! சேத்து வச்ச ரூ.16 லட்சமும் க்ளோஸ்!
சென்ற மூன்று யானைகளில் இரண்டு யானைகள் நன்றாக வளர்ந்தவை. ஆனால் ஒரு யானை மிகவும் சிறியது. தடுப்பு சுவர் உயரம் மட்டுமே இருக்கும் அந்த யானை தடுப்புச் சுவரை தாண்டி மேலே ஏறிச் செல்ல இயலவில்லை. இதனால் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தது யானை.
இதனைத் தொடர்ந்து மேலே சென்ற யானை கீழே இறங்கி அந்த குட்டி யானைக்கு தடுப்புச் சுவரை எப்படி கடக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறது. அது மட்டுமில்லாமல் தும்பிக்கையை வைத்து அந்த குட்டியானையை தூக்கி உதவுகிறது, இந்த வீடியோவை பார்த்தால் நீங்கள் வாவ் சொல்லாமல் போகவே முடியாது. அத்தனை அழகு. அறிவு மிகுந்த விலங்கினங்கள் என்றால் அது நிச்சயமாய் யானைகள் தான்.
அந்த யானைகள் சாலையை கடக்கும் வரை எந்த தொந்தரவும் செய்யாமல் நின்று கொண்டிருந்த ட்ரக் ட்ரைவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil