/tamil-ie/media/media_files/uploads/2021/06/cats-4.jpg)
Trending viral video of farm owner wishing a great morning : நம்மை சுற்றி இருக்கும் அனைவரையும் / அனைத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் தான் நம்முடைய மகிழ்ச்சி இருக்கிறது என்பது தான் உண்மை. பல்வேறு காரணங்களுக்காக நாம் அனைவரையும் கோபித்துக் கொள்வோம், சமயங்களில் சரியான புரிதல்கள் இல்லாமல் தர்ம சங்கடங்களை தோற்றுவிக்கும் அளவிற்கு சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் விலங்குகள் என்று வந்துவிட்டால் அந்த கோபம் எல்லாம் காணாமல் போய்விடும். இங்கே ஒருவர் மனிதர்களையும், விலங்குகளையும் பாரபட்சமின்றி மரியாதையுடன் நடத்தும் காட்சி வியப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க : சுவையான, ஆரோக்கியமான?! சிள்வண்டுக் கறி… வைரலாகும் “சூப்பர் ரெசிபிகள்”…
இங்கிலாந்தில் உள்ள சியான் மலைத் தொடரில் அமைந்துள்ள கிராமப்புறத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கிராமப்புற வாழ்க்கை மற்றும் கிராமப்புற பொருளாதார திட்டங்களை விளக்குவதற்காக ஒரு கம்யூனிட்டி செண்டர் அமைந்துள்ளது. அதில் ஒரு பண்ணை ஒன்றை அமைத்து கோழி, மயில், வாத்துகள், கழுதைகள், வான்கோழி, பூனைகளை வளர்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க : நாய்களை காக்க கரடியிடம் போராடிய 17 வயது இளம் பெண்
Greetings and good morning it’s the Thursday rush hour #rushhour#farmrushhour#thursdayvibes@caro_painterpic.twitter.com/xFFQbK3c9B
— caenhillcc (@caenhillcc) June 3, 2021
பல நேரங்களில் மக்களால் கைவிடப்பட்ட விலங்குகளும் இங்கே வளர்க்கப்படுகிறது. அதிசயம் என்னவென்றால் ஒவ்வொரு விலங்கிற்கும் இங்கே பெயர் உள்ளது. ஒவ்வொரு விலங்கிடமும் தனித்தனியாக பேசுகிறார் அந்த பண்ணையின் மேலாளர் ஹெலி ஃப்ராங்க்ளின். உங்களின் நாளை மிகவும் அழகாக மாற்றும் வீடியோவாக இது இருக்கும். ஃப்ராங்க்ளின் ஒவ்வொரு நாளும் பண்ணையில் இருந்து விலங்குகளை வெளியேற்றும் போதும் அதனை வீடியோவாக ட்விட்டர் தளத்தில் வெளியிடுகிறார். இது அவருக்கு, அந்த விலங்குகள் மீது இருக்கும் அளவற்ற பாசத்தை காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.