New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/cats-11.jpg)
தன்னுடைய 4 வயது குட்டி செய்த அத்தனை சேட்டைகளையும் கடந்து அதனை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டுவிட்டு மீண்டும் ஆழ்ந்த அமைதிக்கு சென்றுவிட்டது எல்மோ.
Trending viral video of gorilla’s refusal to play with young one : குட்டி கொரில்லா ஒன்று தன்னுடைய தந்தையுடன் விளையாட முயற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெக்ஸாலில் இருக்கும் ஃபோர்ட் வொர்த் என்ற மிருக காட்சி சாலையில் இருக்கும் அகஸ்டஸ் என்ற கொரில்லா தன் தந்தை எல்மோவுடன் விளையாட ஏதேதோ சேட்டைகள் செய்கிறது. ஆனால் மன அழுத்தத்துடன் அமர்ந்திருக்கும் போல எல்மோ. தன்னுடைய 4 வயது குட்டி செய்த அத்தனை சேட்டைகளையும் கடந்து அதனை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டுவிட்டு மீண்டும் ஆழ்ந்த அமைதிக்கு சென்றுவிட்டது எல்மோ.
மேலும் படிக்க : பாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்! – வைரல் வீடியோ
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். க்ரேசி மற்றும் எல்மோவிற்கு பிறந்த அகஸ்டஸ். 107 வருட மிருககாட்சி சாலை வரலாற்றில் பிறந்த முதல் முதல் வெஸ்டர்ன் லோலாண்ட் கொரில்லாவாகும். ஐ.யூ.சி.என்னால் அழிந்து வரும் விலங்கினம் என்று அடையாளப்படுத்தப்பட்ட விலங்கினங்களில் இதுவும் ஒன்று. வேட்டை மற்றும் நோய் தொற்றின் காரணமாக இந்த விலங்கினம் அழிந்து வருகிறது என்று கூறப்படுகிறது. முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் 75 ஆண்டுகளில் தான் இதன் எண்ணிக்கையில் மாற்றங்களை காண முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.