இந்த உலகமே அன்புக்கு கட்டுப்பட்டது; மனிதருடன் கொஞ்சி மகிழும் கழுதைப்புலி - வைரல் வீடியோ

பல நேரங்களில் பார்வைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விலங்குகள் பாசத்திற்கு ஏங்கும் இந்த காட்சிகள் நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல நேரங்களில் பார்வைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விலங்குகள் பாசத்திற்கு ஏங்கும் இந்த காட்சிகள் நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Viral video, hyena viral video, viral videos

Viral video : மனிதர்களைக் காட்டிலும் விலங்குகள் தான் எவ்வளவு மகத்தானது. அன்பு காட்டுவதிலும் ஒரு மிருகத்தனம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சமீபமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ பொருத்தமாக இருக்கும்.

Advertisment

இன்ஸ்டகிராமில் ஜே ப்ரூவர் என்ற நபர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஒரு மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இவர் கலிஃபோர்னியாவில் ரெப்டைல் ஜூ என்ற மிருக காட்சி சாலை ஒன்றை துவங்கியுள்ளார். அதில் வளர்ந்து வரும் கழுதைப்புலி ஒன்று அவரிடம் பாசத்துடன் விளையாடி வரும் காட்சிகள் 1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

வைரல் வீடியோ : ஆபத்தில் உதவியவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் குரங்கு

Advertisment
Advertisements

கழுதைப் புலி ஒன்றிடம் இருந்து முத்தங்கள் கிடைக்கும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. அதே போன்று இனி இங்கு என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை என்று அவர் அந்த வீடியோவிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதே போன்று அவர் வளர்க்கும் ஆமை அவருக்கு ஹைஃபைவ் தரும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பல நேரங்களில் பார்வைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விலங்குகள் பாசத்திற்கு ஏங்கும் இந்த காட்சிகள் நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்துகளை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: