நீங்க ஊதுன சங்கு சத்தம்… யெப்பா! உலகமே சிரிக்குது!

நம் உயிரைக் காக்க போராடும் மருத்துவர்களுக்கு நன்றிக்கடன் தெரிவிக்கும் வகையில் கைகளை தட்ட வேண்டும் என்று கூறினார் பாரத பிரதமர் மோடி.

By: Updated: March 28, 2020, 05:01:49 PM

Trending viral video of indian celebrated quarantine : 22ம் தேதி (கடந்த ஞாயிற்றுக் கிழமை) அன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 24ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை இந்தியாவில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணி அளவில் இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து, நம் உயிரைக் காக்க போராடும் மருத்துவர்களுக்கு நன்றிக்கடன் தெரிவிக்கும் வகையில் கைகளை தட்ட வேண்டும் என்று கூறினார் பாரத பிரதமர் மோடி.

ஆனால் மக்களோ வெளியே வந்து ஒன்றாக கூடி, கொரோனாவை பாடையில் வைத்து ஏற்றி, சங்கு சத்தம் முழங்க, கொரோனாவை அமைதியாக பரப்பினார்கள் என்று தான் கூற வேண்டும். இத்தாலியில் ஒரே ஒரு கால்பந்தாட்டத்திற்கு சென்று திரும்பிய காரணத்தால் ஒரு நகரமே  பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் நம் மக்கள் செய்த காரியத்தை நினைத்தால் இன்னும் பயமாக தான் இருக்கிறது.

நம் மக்கள் செய்த காரியத்தையும், உலக நாடுகள் எடுத்துக் கொண்ட முயற்சியையும் ஒன்றாக “கம்பைல்” செய்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் நம் மக்கள் உலவ  விட்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது உங்களுக்காக.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விசயம் தான். சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுங்கள். இந்த கொரோனா நோய் தொற்றில் இருந்து விலகியே இருங்கள். வெளியே எங்காவது செல்ல வேண்டும் என்ற நிலை உருவானால், வீட்டுக்கு வந்த உடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். நம்முடைய வாழ்க்கை தற்போது நம் கையில்.

மேலும் படிக்க : தெருக்களில் கேட்பதெல்லாம் ஆம்புலன்ஸ் சத்தம் மட்டுமே! உறைந்திருக்கும் இத்தாலி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Trending viral video of indian celebrated quarantine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X