New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/monkey-hug-sick-woman.jpg)
ரெட்டிட் வலைதளங்களில் மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Trending viral video of langur hugs woman: ரெட்டிட் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றில் ஒரு குரங்கு, மூதாட்டி ஒருவரை கட்டிப்பிடிக்கும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
இந்த மூதாட்டி அந்த குரங்கிற்கு தினமும் உணவளித்து வந்தார். சில நாட்களாக அந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் அந்த குரங்கிற்கு உணவளிக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து அந்த மூதாட்டியை கண்டுபிடித்த அந்த குரங்கு, அவர் இருக்கும் நிலையை பார்த்து மடியில் ஏறி அவரை கட்டிக் கொண்டது.
அந்த மூதாட்டி அந்த குரங்கின் முதுகை வருடும் காட்சிகள் அனைவரையும் வியப்பிலும் ஆனந்த கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது. ரெட்டிட் வலைதளங்களில் மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பாராட்டி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.