தண்டவாளம் அருகே யானை; யோசிக்காமல் பிரேக் அடித்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர் – வைரலாகும் வீடியோ

மலை, காடுகள் வழியாக ரயில் சேவை மற்றும் அதிவிரைவு ரயில்கள் குறித்தும், மோசமான விபத்துகளில் இருந்து வனவிலங்களை பாதுகாப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்டில் தெரிவிக்கவும்.

Trending viral video of loco pilot stopped the train : யானைகளின் மரணம் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது. அதில் ரயில்களில் மோதி மரணம் அடையும் யானைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. காடுகளுக்குள் செல்லும் தண்டவாளங்கள் மற்றும் அதி விரைவு ரயில்கள் போன்றவை இந்த மரணங்களுக்கு காரணம் என்று யானை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஒரு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். இந்நிலையில் ரயில் தண்டவாளம் அருகே யானை ஒன்று இருப்பதை பார்த்த ரயில் பைலட் அவசர பிரேக்கை உபயோகித்து அந்த யானையை காப்பாற்றியுள்ளார்.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த யானை அடிபடுவதில் இருந்து காப்பாற்றிய பைலட் டி. துரை மற்றும் பி. குமார் ஆகியோருக்கு நன்றி கூறி யானையின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். மலை, காடுகள் வழியாக ரயில் சேவை மற்றும் அதிவிரைவு ரயில்கள் குறித்தும், மோசமான விபத்துகளில் இருந்து வனவிலங்களை பாதுகாப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of loco pilot stopped the train to save an elephant

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com