man gives bath to a thirsty king cobra : சமீபத்தில் கர்நாடகாவில் ராஜநாகத்தை பிடிக்க முயற்சி செய்த இளைஞர் ஒருவருக்கு ஒரு காட்டு காட்டிவிட்டு சென்றது ராஜநாகம் ஒன்று. அந்த அதிர்ச்சியான வீடியோவை பார்த்த கனத்தில் இருந்து, ராஜநாகம் வந்துவிட்டால் என்ன செய்வது, அதனை எப்படி கையாளுவது என்ற குழப்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஒருவர் ராஜநாகத்தை பார்த்தாலே அதிர்ஷ்டம் என்று ட்வீட் செய்கிறார்.
12 அடி நீள ராஜநாகத்தை பார்த்தால் அதிர்ஷ்டமாம்… சொல்வது யாரென்று பாருங்கள்!
அவை அனைத்தையும் தாண்டி, இங்கே ஒரு நபர் ராஜநாகத்திற்கு தண்ணீர் கொடுத்த கையோடு குளிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். என்னமோ, இந்த மாதம் ராஜநாகம் மாதம் என்பது போல் போய்க்கொண்டிருக்கிறது.
செப்டம்பர் மாதம் 23ம் தேதி அன்று ஹெலிகாப்டர் யாத்ரா என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
தற்போது நிலவி வரும் காலநிலையால் மிகவும் தாகத்துடன் காணப்பட்ட ராஜநாகம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. பலரும் அதனை பார்த்து, பயந்து அச்சத்தில் உறைந்து போக, இந்த இளைஞர் அந்த பாம்பி தேவையை உணர்ந்து தண்ணீர் பிடித்து பக்கெட் பக்கெட்டாக அந்த பாம்பின் மீது ஊற்றுகிறார். அந்த பாம்பும் கோபம் ஏதும் அடையாமல் அமைதியாக நிற்கிறது. பிறகு அந்த பாம்பிற்கு தேவையான தண்ணீரை வழங்கி அதனை விட்டு விலகி நின்றார் அந்த இளைஞர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil