டைட்டானிக் படம் நியாபகம் வருதே! ஊரே பற்றி எரியும் போது வயலின் வாசிக்கும் முதியவர் - வீடியோ
டென்னிஸி வால்ட்ஸ் இசையை இசைத்த இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இங்கே நாங்கள் அமர்ந்திருக்கும் போதே நெருப்பு எங்களை கொன்றுவிடும் என்ற அளவிற்கு இங்கு அழுத்தமான சூழல் நிலவி வருகிறது
Man plays violin for California wildfire evacuees : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெற்கு டாஹோ ஏரி பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தீவிரமாக மக்கள் இருக்கும் பகுதி வரை பரவியுள்ளது. அவசர அவசரமாக அந்த பகுதியில் இருந்து வெளியேறி வரும் மக்கள், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கால்டோர் காட்டுத்தீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத் தீ மக்களை அச்சுறுத்தி வருகின்ற நிலையில், சாலையில் ஒருவர் வயலின் வாசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment
டைட்டானிக் படத்தில், கப்பல் கடலில் மூழ்கும் போதும் கூட, அமைதியான சூழலை உருவாக்கும் முயற்சியில் ஒரு இசைக்குழு செயல்படுவதை போன்று இவர் இப்படி இசைத்துக் கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ உங்களுக்காக
சுமார் 22 ஆயிரம் நபர்கள் வசிக்கும் அந்த பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 50 வழியே பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 மணி நேரம் வாகனங்கள் ஒரே இடத்தில் நிற்கும் சூழல் உருவானது. அப்போது தான் மெல் ஸ்மோதர்ஸ் என்ற இந்த இசைக்கலைஞர் மனம் உருக இந்த இசையை இசைத்துக் கொண்டிருந்தார். இதுவரை இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
டென்னிஸி வால்ட்ஸ் இசையை இசைத்த இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இங்கே நாங்கள் அமர்ந்திருக்கும் போதே நெருப்பு எங்களை கொன்றுவிடும் என்ற அளவிற்கு இங்கு அழுத்தமான சூழல் நிலவி வருகிறது. அதனால் இசைத்தேன் என்று கூறினார். அவருடன் இருந்த பலரும் இவரின் இந்த செயலுக்கு நன்றி கூறினார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil