New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/cats-4.jpg)
சிறு பாலத்தில் லாவகமாக படுத்து அந்த மான் குட்டியின் காதுகளை பிடித்து அதனை மேடேற்றி விட காட்டுப்பகுதிக்குள் துள்ளியோடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
trending viral video of man rescues a deer : இடர்பாடுகளில் இருக்கும் போது தான் நல்ல நண்பர்களை அடையாளம் காண முடியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இடர்பாடுகளில் உதவும் மனிதர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று அவர்கள் கூறுவதும் ஒன்றும் பொய்யல்ல தான்.
சமீபத்தில், இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றும் அதையே மெய்பிக்கிறது.
Viral Video: முட்டை முதல் இளம் பருவம் வரை; குஞ்சுகளை பாதுகாப்பதில் மீன் கொத்திக்கு நிகரே இல்லை
ஓடையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அந்த நீரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மான் குட்டி ஒன்று வெள்ளத்தோடு அடித்து வரப்படுகிறது.
இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் அதனை எவ்வாறு காப்பாற்றுவது என்று யோசித்துக் கொண்டே இருக்க, ஒருவர், அந்த ஓடை முடியும் இடத்தில் இருந்த சிறு பாலத்தில் லாவகமாக படுத்து அந்த மான் குட்டியின் காதுகளை பிடித்து அதனை மேடேற்றி விட காட்டுப்பகுதிக்குள் துள்ளியோடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Helping one person might not change the world
— Susanta Nanda (@susantananda3) September 15, 2021
But it could change the world for one person❤️ pic.twitter.com/MrxLTx4LW2
51 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.