இந்த ஆண்டின் காதல் கணவர் பட்டத்தை இவருக்கு கொடுங்கள்; வைரலாகும் புகைப்படம்

மகிழ்ச்சியான சூழலிலும் இக்கட்டான சூழலிலும் உடன் இருப்போம் என்பதற்கு இது ஒரு உதாரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

viral video, trending viral video

Viral Video : கடந்த ஐந்து மாதங்கள் கொரோனா வைரஸால் நாம் படாத பாடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் நம் மனநிலையை நேர்மறையாக வைத்திருக்க நாம் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றோம். சில நேரங்களில் நம் மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது சமூக வலைதளங்களும், வைரல் வீடியோக்களும், கொஞ்சம் பாஸிட்டிவ் செய்திகளும் தான்.

அந்த பிரிவில் இந்த வீடியோவை சேர்க்கலாம். மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்ற கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது.

தன்னுடைய ஜீப்பின் பின் ட்ரெய்லர் ஒன்றை இணைத்து அதில் சேர் ஒன்றை வைத்து மனைவியை அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மகிழ்ச்சியான சூழலிலும் இக்கட்டான சூழலிலும் உடன் இருப்போம் என்பதற்கு இது ஒரு உதாரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of mizoram mans creative idea to take his covid positive wife to quarantine

Next Story
மனிதர்களைப் போலவே வாத்து, கோழி, கழுதைகளுக்கும் மரியாதை உண்டு – ச்ச்ச்சோ ஸ்வீட் வீடியோTrending viral video of farm owner wishing a great morning
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com