New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/1-horz-1.jpg)
Mumbai Guitarist Jatin Talukdar plays guitar for unusual audiences
சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியூக்களை அள்ளி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Mumbai Guitarist Jatin Talukdar plays guitar for unusual audiences
Mumbai Guitarist Jatin Talukdar plays guitar for unusual audiences : இந்த கொரோனா வைரஸ் காலத்தில் அனைத்து நபர்களும் எதிர்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்து போயுள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனாலும் ஆன்லைன் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இசையை நாம் மட்டும் ரசிப்பதில்லை. இந்த பிரபஞ்சம் முழுவதுமே இசையால் நிறைந்தது. கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இசையின் மகிமை புரியும்.
ஆனாலும் இந்த வீடியோவில் வரும் ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். பச்சை நிற சிறகுகளுடன், சிவப்பு நிற அலகுகளால் சின்ன சின்ன கீச்கீச் ஒலியுடன் இசை இசைப்பவரை மகிழ்விக்கும் கிளிகள் தான் இங்கே ரசிகர்கள். இந்த குட்டி ரசிகர்களுக்காக, மும்பையை சேர்ந்த கிதார் இசை கலைஞர் ஜத்தின் தலுக்தார் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க : 15 வகையான மூலிகைகளுடன்… அட இது சோப்பு இல்லைங்க, நோய் எதிர்ப்பு சக்தி ஸ்வீட்
வாசிப்பவரை ஊக்குவிக்கும் வகையில் இடை இடையே கீச் கீச்சென்று கத்தி ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன அந்த கிளிகள். பார்க்கவே ரொம்ப க்யூட்டா இருக்கும் இந்த கிளிகள் ஜத்தினுக்கு வெகு சமீபத்தில் தான் நண்பர்களாக மாறியுள்ளனர். ஜிம் மற்றும் கைரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளிகளுக்காக ஜத்தின் வாசிக்கும் கித்தார் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியூக்களை அள்ளி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.