Trending viral video of narrow Himachal road leaves netizens shocked : அன்க்கூர் ரப்ரியா, ஐ.ஆர்.எஸ். அதிகாரி இன்க்ரெடிபிள் இந்தியா என்று தலைப்பிட்டு, சம்பாவில் இருக்கும் சச் பாஸ் செல்லும் சாலையின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் “சாதாரண சாலை இல்லை. வருடத்தில் 8 முதல் 9 மாதங்கள் வரை பனியால் மூடப்பட்டிருக்கும் சாலை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : கொரோனாவை வென்ற பாட்டி : ஜில்ல்ல்லு பியருடன் செம்ம ஜாலியா இருக்கும் 103 வயது பெண்மணி
ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் இந்த பள்ளாத்திக்கின் வீடியோவை படம் எடுத்தவர் இந்த ஐ.ஆர்.எஸ் அலுவலர் தான். அவரின் நண்பர் வண்டியோட்ட, ஜூலை 2019ம் ஆண்டு அவர் இந்த வீடியோவை எடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க : கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி; ஒடிசாவில் அதிர்ச்சி
மிகவும் சவாலான சாலைகள், மிகவும் அழகான இடங்களில் போய் முடியும் என்ற பழமொழிக்கு ஏற்றது போல் அமைந்திருக்கிறது இந்த இடம். இந்த சாலையை பார்த்தால் நிச்சயமாக ஒரு நிமிடம் மூச்சே அடைத்துவிடுகிறது. சத்தியமாக சாமானிய மக்களுக்கான பயணத்திற்கான இடம் இது இல்லை. இந்த சாலையில் பயணிக்கவும் ஒரு தைரியம் நிச்சயம் தேவை தான். இரண்டு பக்கங்களும் பனிமலைகள், நடுவில் ஓடும் ஆறு, கொட்டும் அருவி. கேட்கும் போதே சில்லென இருக்கிறது. ஆனாலும் சாலைகள் நிலையை பார்த்தால் தான் பயம் ஆட்டுவிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“