Trending Viral Video of Parakeet saying Meenukutty : சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்று சொல்வோம். ஆனால் இங்கே ஒரு கிளி தன்னுடைய பெயரை மட்டும் மிகவும் அழகாக கூறுவதை பாருங்கள். இன்று உங்கள் நாளை இதற்கு மேல் யாராலும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றிவிட முடியாது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே அமைந்திருக்கும் கொலப்பள்ளி தேயிலை தோட்டப் பகுதியில் அமைந்திருக்கிறது ஒத்தலேன் எனப்படும் குடியிருப்பு பகுதி. காட்டில் இருந்து பறந்து இந்த பகுதியில் தஞ்சம் புகுந்த கிளியை வளர்த்து வருகின்றனர் அங்கிருக்கும் குடிமக்கள்.
View this post on Instagram
தன்னுடைய பெயரை மட்டும் அழகாக திருப்பி திருப்பி கூறுகிறது இந்த கிளி. நீ யானை குட்டியா என்றால், மீனு என்று கூறுகிறது இந்த செல்லக்கிளி. மீனுக்குட்டி என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையையும் இந்த கிளி கூறுவதில்லை. ஆனால் யாராவது அந்த பகுதியில் நடக்க துவங்கினால் அலாரம் போன்று தன்னுடைய பெயரையே திருப்பி திருப்பி கூறி எச்சரிக்கையும் செய்கிறது மீனுக்குட்டி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil