New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/hip-hop-759.jpg)
ஹிப்-ஹாப் எப்போதும் என்னுடைய முதல் காதல். ஆனால் அதே நேரத்தில் எனக்கு பரதத்தின் மீதும் அதிக ஆர்வம் உள்ளது என உஷா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்
Paris-based duo’s fusion of hip-hop and Bharatanatyam : கூத்தும் பரதமும் ஒன்றாகிவிடுமா என்று ஆண்டாண்டு காலமாக இங்கு கலைசார் விவாதங்கள் நடைபெற, அனைத்தும் கலை தான். அனைத்தும் நடனம் தான் என்று ஆடல் கலையை அரங்கேற்றுகிறார்கள் இந்த பெண்கள்.
பாரிஸை சேர்ந்த இப்பெண்கள் பரதம் மற்றும் ஹிப்-ஹாப் என இரண்டையும் ஒரே நேரத்தில் ஆடி பார்க்கும் மக்களை அசரடித்துவிடுகிறார்கள். பார்க்கும் நமக்கே “ப்ப்ப்பா” என்ன ஒரு திறமை என்று கேட்க தோன்றுகிறது. இவர்களின் நடன வீடியோக்கள் தான் தற்போது ஆன்லைனில் ட்ரெண்டாகி வருகிறது.
ஓர்லேன் டேடே மற்றும் உஷா ஜே என்ற இரண்டு நடன கலைஞர்கள் ஜாக் ஹார்லோவின் வாட்ஸ் பாப்பின் பாடலுக்கு ஹிப்-ஹாப்புடன் கூடிய பரதத்தை ஆடி காட்டுகின்றனர். இதற்கு ஹைப்ரிட் பரதம் என்று பெயரிட்டுள்ளனர் அவர்கள். இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள உஷா, ஹிப்-ஹாப் எப்போதும் என்னுடைய முதல் காதல். ஆனால் அதே நேரத்தில் எனக்கு பரதத்தின் மீதும் அதிக ஆர்வம் உள்ளது. நான் பிரமாதமான பரத கலைஞர் இல்லை. ஆனால் நிச்சயம் ஒரு நாள் ஆவேன் என்று கேப்சனில் எழுதியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.