Trending viral video of parrot singing rock classics : வளர்ப்பு பிராணிகளில் கிளிகளுக்கு எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல் இடம் தான். ஏன் என்றால் அது நன்றாக பேசும். நாம் பேசுவதையும் கேட்டுக் கொள்ளும். அதிக பராமரிப்பும் தேவையில்லை. பழகிவிட்டால் நம்மை விட்டு வெளியேறவும் செய்யாது.
சிலர் கிளிகளை வளர்த்து பேசக் கற்றுத் தருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இங்கே ஃப்ராங்க் என்ற கிதார் இசைக் கலைஞர் தன்னுடைய கிளிக்கு ராக் க்ளாசிக் வகை பாடல்களை பாடவே கற்றுக் கொடுத்துள்ளார். பீட்டல்ஸ், லெட் ஜெப்லின், கன்ஸ் அண்ட் ரோசஸ் என்று எதையும் விட்டு வைக்காமல் அனைத்திலும் அசத்துகிறது இந்த கிளிப் பாடகி டிக்கோ.
ஃப்ளாப் எரா ஆரஞ்ச் கோட் கை என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்டுள்ளோர் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த ஃப்ராங்கை தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அனைத்து வீடியோக்களிலும் இவர் கிதார் வாசிக்க கிளிப் பாடகி தன்னுடைய மெல்லிய அழகான குரலால் அனைவரையும் வசப்படுத்தி வருகிறார். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்டில் தெரிவிக்கவும்,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil