Trending viral video of photographer falls into swimming pool : சமூக வலைதளங்களில் தங்களின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவது போய், அடிக்கடி அந்த திருமணங்களில் ஏற்பட்ட சொதப்பல்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில். @aperinastudios என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் புகைப்படக் கலைஞர் நீச்சல் குளத்தில் தவறி விழும் காட்சியில் பதிவிடப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்து மணமக்கள் இருவரும் நடந்து வருகின்ற போது, அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் தவறி நீச்சல் குளத்தில் விழ, சுற்றிலும் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறிது விநாடிக்குள்ளே, அவருடன் பணியாற்றும் மற்றொரு புகைப்படக் கலைஞர்க் அவரை தூக்கி விட சற்று அமைதி நிலவியது.
இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். நெட்டிசன்கள் பலர் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதையும் எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil