சத்தியமா இந்த பைலட் ஜகஜால கில்லாடி தான்; நடுக்காட்டில் செம்ம லேண்டிங்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trending viral video of pilot landing his plane amid thick forest

Trending viral video of pilot landing his plane amid thick forest

Trending viral video of pilot landing his plane amid thick forest : எத்தனையோ வைரல் ட்ரெண்டிங் வீடியோக்களை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில், சமூக வலைதளங்களில் கண்டு ரசித்திருப்போம். ஆனால் இது போன்ற நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை இது வரை கண்டதே இல்லை.

Advertisment

விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு அதில் “பல்வேறு தலை சிறந்த பைலட்டுகளுடன் பயணித்திருக்கின்றேன். பல்வேறு சவாலான இடங்களில் லேண்டிங்க் ஆகியுள்ளோம். மிகவும் ஆபத்தான காலங்களில் இருந்து தப்பியும் இருக்கின்றேன். ஆனால் இந்த வீடியோ, இது மிகவும் சவாலானது தான்” என்று கூறியுள்ளார்.

10, 2020
Advertisment
Advertisements

கிரென் ரிஜ்ஜூ வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ, பைலட் Vuelos y Viajes அவருடையதாகும். சுற்றிலும் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் காட்டில் மிகவும் மிகவும் அசாதரணமாக தான் ஓட்டி வந்த விமானத்தை தரையிறக்கம் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது மட்டுமில்லாமல் தாங்கள் பார்த்திலேயே மிகவும் அட்வென்ச்சரான வீடியோ இதுவாகத்தான் இருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: