சுதந்திரமாக இருப்பது போன்ற ஒரு அழகான உணர்வுப்பூர்வமான விசயம் வேறேதும் இல்லை. இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து வகையான ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும். அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள ஷி-யோமி பகுதியில் பிடிக்கப்பட்ட சிவப்பு பாண்டா பின்னர் அடந்த காட்டுக்குள் விடப்பட்டது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
Advertisment
சிவப்பு நிற விலங்கு ஒன்று ஊர்பகுதிக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து மெச்சுக்கா பகுதியில் வாழும் டோனி மோசிங் மற்றும் தக்கர் கோட்டின் மோசு ஆகியோர் இந்த விலங்கை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு இந்த விலங்கு காட்டுக்குள் விடப்பட்டடது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 65 நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
இந்தியாவில் இந்திய சிவப்பு பாண்டாக்கள் மற்றும் சீன சிவப்பு பாண்டாக்கள் என இரண்டு வகையான பாண்டாக்களை கிழக்கு இமயமலைத் தொடர்களை ஒட்டிய பகுதிகளில் காண முடியும். அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது சிவப்பு பாண்டா. மேற்கு வங்கத்தின் டார்ஜ்லிங் மட்டும் இல்லாமல் சிக்கிம் மாநிலத்திலும் இந்த வகையான பாண்டாக்களை காண முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil