இந்தியாவில் இப்படி ஒரு நதியா? மலைகளின் நடுவே தவழ்ந்து செல்லும் தீஸ்தா நதியின் வைரல் வீடியோ

இரண்டு மலைகளை இணைக்கும் ஒரு பாலம், அதன் கீழே அமைதியாக வெகு தூரம் பயணித்து பார்வைக்கு அப்பால் எங்கோ சென்று மறைந்துவிடுகிறது அந்த நதி. பார்க்கவே அச்சத்தையும் பிரம்மிப்பையும் சேர்த்து தரும் அந்த வீடியோவை கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

Viral video, trending viral video of teesta river, river teesta

Trending viral video of river teesta : இந்தியா இயற்கை வளங்களில் மற்ற நாடுகளை விஞ்சி விடும் அளவிற்கு செழிப்பாகவும் வளமையாகவும் இருக்கிறது. ஆனாலும் என்னவென்றால், பல்வேறு தேவைகளுக்காக காடுகள் வெட்டப்பட்டும், மலைகள் குடையப்பட்டும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த செம்மையை நாம் இழந்து வருகிறோம்.

கள நிலவரம் இப்படி இருக்க, ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குள் அடங்கி விடாமல் ஆச்சரியம் தரும் அழகை தன்னுள் புதைத்திருக்கிறது. 315 கி.மீ நீளம் கொண்டுள்ள இந்த நதியானது கிழக்கு இமயமலைகளில் உருவாகி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியே பயணித்து, வங்கதேசத்திற்குள் நுழைகிறது. 12,370 சதுரை கிமீ பாசனத்திற்கு உதவும் இந்த நதியானது இறுதியாக வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

இரண்டு மலைகளை இணைக்கும் ஒரு பாலம், அதன் கீழே அமைதியாக வெகு தூரம் பயணித்து பார்வைக்கு அப்பால் எங்கோ சென்று மறைந்துவிடுகிறது அந்த நதி. பார்க்கவே அச்சத்தையும் பிரம்மிப்பையும் சேர்த்து தரும் அந்த வீடியோவை கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of river teesta running through coronation bridge

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com