காரையே விழுங்கிய சாலை; இந்த வேலைய பாத்த காண்ட்ராக்டர் “நேசமணி” யாருய்யா?

எட்டிப்பாத்தா பாதாள உலகமே தெரியும் போல... அட காசு வாங்கிதான ரோடு போட்றீங்க, கொஞ்சம் நல்லதா போட்டாதான் என்னனு நாங்க கேக்கலைங்க, நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பதிவு செஞ்சுருக்காங்க

எட்டிப்பாத்தா பாதாள உலகமே தெரியும் போல... அட காசு வாங்கிதான ரோடு போட்றீங்க, கொஞ்சம் நல்லதா போட்டாதான் என்னனு நாங்க கேக்கலைங்க, நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பதிவு செஞ்சுருக்காங்க

author-image
WebDesk
New Update
Sinkhole Delhi, Traffic police car, Dwaraka sector 18,

Trending viral video of Sinkhole in Delhi swallows car : தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்தும் ஓடியும் வருகிறது. சாலைகள் பல நேரங்களில் இந்த மழைக்காலங்களில் பெரும் சேதாரங்களுக்கு ஆளாவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

Advertisment

டெல்லியின் துவாராக 18வது செக்டாரில், ஹூண்டாய் ஐ10 கார் ஒன்று சாலையில் ஏற்பட்ட பள்ளம் ஒன்றில் விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல்துறைக்கு சொந்தமான இந்த காரை ஓட்டி வந்த கான்ஸ்டபிள் அஷ்வானி எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த காரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment
Advertisements

எட்டிப்பாத்தா பாதாள உலகமே தெரியும் போல… அட காசு வாங்கிதான ரோடு போட்றீங்க, கொஞ்சம் நல்லதா போட்டாதான் என்னனு நாங்க கேக்கலைங்க, நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பதிவு செஞ்சுருக்காங்க. டெல்லியில் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கனமழை வெளுத்து வாங்குகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரால் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது. மூன்று பேர் இதுவரை கனமழையில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: