நீ யாரா வேணும்னாலும் இரு… ஆனா என் வீட்டுக்குள்ள வராத! நல்ல பாம்புக்கே தண்ணீ காட்டிய பூனை

வனத்துறையினர் அந்த பாம்பை அங்கிருந்து மீட்டுச் செல்லும் வரையில் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்றிருந்தது அந்த பூனை

cat videos, snakes and cats videos

Trending viral video of snake : நம்முடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் நடத்தையெல்லாம் நமக்கு மட்டும் தான் தெரியும். எப்போது என்ன செய்யும் என்றும், எப்போது எப்படி தன்னையே மாற்றிக் கொண்டு நல்லவன் போல் வளம் வரும் என்றும் தெரியும். வீட்டில் தொடர்ச்சியாக பூனைகள் வளர்ப்பவர்கள் ஒரு பல்லியைக் கண்டால் கூட “துண்டக் காணோம், துணியக் காணோம்னு” தங்கள் வீட்டுப் பூனைகள் தலைதெரிக்க ஓடும் என்று அறிந்திருப்போம். அதே நேரத்தில், அதன் குட்டிப் பூனைகளுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் சரிக்கு சமமாய் சண்டை போடும் என்றும் தெரியும்.

பாசம் என்று வந்துவிட்டால், வீரம் எல்லாம் தானாகவே வந்துவிடும். அப்படித்தான் இங்கே ஒரு பூனை, தன் எஜமானர் வீட்டிக்குள் நல்ல பாம்பு ஒன்று செல்லாமல் அரை மணி நேரம் தம்கட்டி நின்றுள்ளது. இந்த வீடியோ மற்றும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

ஒன்றரை வயதாகும் இந்த பூனை எங்கள் வீட்டில் ஒருவர் போல் வாழ்ந்து வருகிறது என்று கூறிய அந்த பூனையின் உரிமையாளர், அந்த பாம்பினை பத்திரமாக பிடித்து வனத்தில் விடுவதற்கு வனத்துறையினர் வரும் வரை பூனை அந்த பாம்பை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பலரும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததோடு, தங்கள் வீட்டு பூனைகள் செய்த சேட்டைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.

பூனைகள் தங்களின் எஜமானர்கள் மற்றும் தான் வசிக்கும் வீடு குறித்து எப்போதும் பொசசிவாக இருக்கும். புதிதாக ஒரு செல்லப் பிராணி வாங்கினால் கூட பூனையின் அனுமதி இருந்தால் மட்டுமே அந்த செல்லப் பிராணி அந்த வீட்டில் நிலைத்து இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துகளை அங்கே பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்தும், இந்த பூனையின் செயல்பாடு குறித்தும் உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of snake got stopped by a cat from entering a house

Next Story
ஒரு வேளை சுந்தரா டிராவல்ஸ் எலியா இருக்குமோ? எம்.பி.க்களை ஓட விட்ட எலியின் வைரல் வீடியோviral video, trending viral virdeo, tamil viral news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com