New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/cats-5.jpg)
கடைசி நிமிஷம் வரை உயிர் பிழைக்குமா, பாம்புகளிடம் சிக்கிக் கொள்ளுமா என்ற ஒரு பரபரப்பு இந்ந்த வீடியோவில் இருக்கிறது. அப்படியே ஐ.பி.எல். இறுதி போட்டி பார்ப்பதற்கு சமம் இந்த வீடியோ
Trending viral video of snakes hunting marine iguanas : இயற்கையில் ஒரு உயிரினம் வாழ மற்றொரு உயிரினத்தை சார்ந்து தான் இருக்கிறது. வேட்டை என்பது மறுக்கமுடியாத ஒரு நிகழ்வாகவே இருக்கிறது. விலங்குகள், அலிகேட்டர்கள் போன்ற பெரிய ஊர்வன வகைகள் வேட்டியாடி பாத்திருப்போம். பாம்புகள் என்றால் தனித்தனியாக தங்களின் தேவைக்காக வேட்டையாடும் என்று நினைத்திருப்போம்.
ஆனால் இங்கு கூட்டமாக உடும்புகளை வேட்டையாடும் பாம்புகளின் காட்சிகள் முதன்முறையாக படமாக்கப்பட்டுள்ளது. ப்ளானட் எர்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கலபாகோஸ் தீவில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.
பி.பி.சி. எர்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் லைக் செய்துள்ளனர். கடற்கரை மணற்பரப்பில் புதிதாக பிறக்கும் உடும்புகளை வேட்டையாட இத்தனை பாம்புகளும் அங்கே காத்திருக்கின்றன. பாம்புகளுக்கு கண்கள் அவ்வளவு தெளிவானதாக இல்லை என்றாலும் உணர் திறன் மூலம் தன்னுடைய இரையை வேட்டையாடும் பண்பு கொண்டது. ஆனால் இங்கு இத்தனை பாம்புகளுக்கு மத்தியிலும் ஒரே ஒரு உடும்பு சாமர்த்தியமாக தப்பித்திருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நீங்கள் பார்க்கும் மிகவும் அசாத்தியமான வீடியோக்களில் நிச்சயம் இதுவும் ஒன்றாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.