அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! ஸ்கிப்பிங் செய்து நெட்டிசன்களை “இம்ப்ரெஸ்” செய்த மத்திய அமைச்சர்

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

Viral video, sports minister anurag thakur ,

trending viral video of sports minister Anurag Thakur : அரசியல்வாதிகளின் கருத்துகளும், கமெண்டுகளும், புகைப்படங்களும் வைரல் ஆவது அரசியல் வாழ்வில் சகஜம் தான். சமீபத்திய வருடங்களில் அரசியல்வாதிகள் செய்யும் நல்லதையும், கெட்டதையும் ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களுக்கு கொண்டு வந்து பேசுபொருளாக்கி விடுகின்றனர் நெட்டிசன்கள்.

யோகா செய்வது உடலுக்கு நல்லது என்று பல காலங்களாக பாஜகவினர் புகைப்படங்களை பதிவு செய்து நாம் பார்த்திருப்போம். தற்போது விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்கிப்பிங் விளையாடும் வைரல் வீடியோவை பாருங்கள்.

ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான் சந்தின் பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தன்னுடைய ஸ்கிப்பிங் திறனை, ஃபிட் இந்தியா என்ற செயலி அறிமுகம் செய்யும் போது வெளிப்படுத்தியுள்ளார்.

விளையாட்டு துறைகளில் இருக்கும் நபர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் இந்த செயலி, இந்திய அரசு மக்களுக்கு வழங்கும் அன்பளிப்பாகும் என்று கூறினார். ஃபிட்டான இளைஞர்கள் வளமான இந்தியாவை உருவாக்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

அவர் ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உங்களின் ஃபிட்னஸ் லெவல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of sports minister anurag thakur rope skipping at the app launch event

Next Story
அதே கேக்… அதே டான்ஸ்… 59 வருட காதல் வாழ்வை வித்தியசமாக கொண்டாடிய மூத்த தம்பதியினர்wedding photos, viral news, vial photos,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com