”சி.எம். இங்க வரணும்… இது என் ஊரு.. என் கோட்டை”… காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விளாசிய போலீசார்

”நான் வீட்டிலேயே இருக்கின்றேன். வெளியே வரமாட்டேன். ஆப்பரேசன் செஞ்சிருக்கு... அடிக்காதீங்க" என பின்பு கெஞ்சினார்!

By: Published: March 27, 2020, 1:43:37 PM

Trending Viral video of Trichy youth calls CM to show him coronavirus : கொரோனாவால் மக்கள் அதிக அளவில் அச்சமடைந்துள்ளனர். யாரும் வெளியில் நடமாடாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ சிறிதும் பொறுப்பே இல்லாமல் தெருக்களில் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு இளைஞர் ரோட்டில் சுற்றித்திரிந்தது மட்டுமில்லாமல் காவல்துறையினரிடம் தேவையில்லாமல் சர்ச்சை செய்து கொண்டிருந்தார். காவல்துறையினர் அவரிடம் ஏன் இப்படி சுற்றித்திரிகின்றாய் என்று கேட்டதற்கு ”நான் ஏன் போக வேண்டும். இது என் கோட்டை. சி.எம்.ஐ நேரில் வந்து சொல்ல சொல்லுங்க. ஓட்டு கேக்க மட்டும் வர்றாருல. நான் ஏன் வீட்டுக்கு போகனும். இது என் உரிமை” என்று கொஞ்சம் கூட, இன்றைய நிலமையின் தீவிரம் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க : நள்ளிரவில் கேரள எல்லையில் தத்தளித்த 14 பெண்கள்… துரிதமாக மீட்ட பினராயி விஜயன்!

Trending Viral video of Trichy youth calls CM to show him coronavirus

அந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறையினர், அவரை அங்கே முட்டி போட வைத்து தடியால் கேள்வி கேட்டு சரியான பாடம் கற்பித்துக் கொடுத்தனர். அனைவரும் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்று தெரியாமல் அந்நபர், காவல்துறையின் கவனிப்பிற்கு பிறகு ”நான் வீட்டிலேயே இருக்கின்றேன். வெளியே வரமாட்டேன். ஆப்பரேசன் செஞ்சிருக்கு… அடிக்காதீங்க” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோக்களும் தனித்தனியாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Trending viral video of trichy youth calls cm to show him coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X