trending viral video of well mannered bear : வனவிலங்குகள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வந்தால் பொருள் சேதம் துவங்கி உயிர் சேதம் வரை ஏற்பட்டு மனதிற்கு துன்பம் தரும் நிகழ்வுகள் அரங்கேறிவிடும். இரண்டு தரப்பிலும் யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்தால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாக முடிந்துவிடுகிறது.
ஆனால் இந்த வீடியோவில் வளம் வரும் கரடி ஒன்று என்ன செய்கிறது என்று பாருங்கள். இந்திய வனத்துறை அதிகாரி சுதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், வீட்டின் முகப்பில் நடந்து வந்த கரடி ஒன்று, அந்த வீட்டில் இருந்து ஒரு பாட்டி, தாத்தா வெளியேறுவதைக் கண்டதும் அப்படியே அமைதியாக நின்றுவிட்டது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பரிதவிப்புடன் நாம் இருக்க, ஆனால் அந்த கரடி அவர்களை தாக்கவில்லை. மாறாக அவர்கள் அந்த பகுடியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதியாக நடந்து சென்றது. இந்த வீடியோவை இது வரையில் 1 லட்சத்தி 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த கரடியின் செயலை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil