திருடுறதும் ஒரு கலை பாஸ்... ஏ.டி.எம் மெஷினை திருட வந்து வெறுங்கையுடன் திரும்பிய கத்துக்குட்டிகள்!

இவர்கள் திருட்டுக் காரில் திருட வந்து 10 ஆயிரம் டாலர்கள் செலவு இழுத்து சென்றது மட்டும் தான் மிச்சம்.

Trending Viral Video Two men try to rob an ATM : திருடுறதும் ஒரு கலை பாஸ்… சும்மா நெனைச்ச மாதிரியெல்லாம் திருட முடியாது என்று யாரோ சொல்வது போல் அமைந்திருக்கிறது இரண்டு புதுத் திருடர்கள் செய்த அட்டகாசம்.

இரண்டு திருடர்கள் ஒரு எஸ்.யூ.வி காரில் வந்து ஒரு ஏ.டி.எம். மிஷினை திருட பல்வேறு வகையில் முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் அவர்களால் அந்த ஏ.டி.எம். மெஷினை துளியும் கூட நகர்த்த இயலவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு வர்த்தக மையத்தில் ஒரு ஏ.டி.எம். மெஷின் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை தங்களின் கார் கொண்டு தாக்க முயற்சி செய்கிறார்கள் திருடர்கள். இரண்டு முறை, மூன்று முறை என தொடர்ச்சியாக காரை கொண்டு வந்து அந்த ஏ.டி.எம். மிஷினில் மோதியும் ஏ.டி.எம். மெஷின் துளியும் நகரவில்லை.

Trending Viral Video Two men try to rob an ATM

பிறகு ஏ.டி.எம். மெஷினை அல்லேக்காக தூக்கிக் கொண்டு சென்றுவிடலாம் என்று முயற்சி செய்து பார்க்கின்றார்கள். அதன் அடிப்புறத்தில் கயிற்றினை கட்டி நகர்த்த முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும் அந்த மெஷின் நகர்ந்தபாடில்லை. மாறாக அவர்கள் இருவரும் ஓட்டி வந்த எஸ்.யூ.வி தான் முழுவதும் சேதாரமாகிவிட்டது. ஏ.டி.எம். மெஷினும் கொஞ்சம் சேதாரமடைந்துவிட்டது. ஆனாலும் திருடர்களுக்கு அது பெரிய தோல்வி தான். உடைந்த காருடன் வெளியேறிச் சென்றது தான் மிச்சம்.

தர்பாரின் ‘Chummakizhi’ பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?

விக்டோரியா காவல்துறை இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். க்ரான்பர்ன் ஏரியாவில் வெள்ளை நிற நிஸ்ஸான் துவாலிஸ் காரில் சந்தேகத்திற்கு உள்ளாகும் வகையில் காலை 1 மணியில் இருந்து 4 மணி வரை சுற்றித்திரிந்தவர்கள் யார் என்று விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வெள்ளை நிறக்காரை அருகில் எங்கோ விட்டுச்சென்றுவிட்டனர் கொள்ளையர்கள். அந்த காரும் திருட்டுக் கார் தான் என்று விசாராணையில் தெரிய வந்துள்ளது. மொத்தமாக 10 ஆயிரம் டாலர் மதிப்பில் சேதாரங்களை இவர்கள் உருவாக்கியது தெரியவந்துள்ளது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

மேலும் படிக்க : காட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடியை துணிச்சலாக காப்பாற்றிய வீரப் பெண்; வைரல் வீடியோ

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close