scorecardresearch

சிறப்பான வேலைப்பாடு; களைத் தாவரத்திலிருந்து யானை மாதிரிகளை உருவாக்கிய தமிழக பழங்குடியினர்

முதுமலையைச் சேர்ந்த 70 பழங்குடியினர், பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்தும் வகையில் காடுகளில் பரவியிருக்கும் லந்தானா களையிலிருந்து இந்த அழகான யானைகளை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளனர்

சிறப்பான வேலைப்பாடு; களைத் தாவரத்திலிருந்து யானை மாதிரிகளை உருவாக்கிய தமிழக பழங்குடியினர்

இந்த வார தொடக்கத்தில், உள்ளூர் தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆக்கிரமிப்பு பூக்கும் தாவரமான லந்தானா கமாராவால் செய்யப்பட்ட யானைகளின் உயிர் மாதிரிகள் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் எலியட் கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டன. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது செய்யப்பட்டது.

முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சோலா டிரஸ்ட் என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த யானைப் பிரதிகளை உருவாக்கியுள்ளனர்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, இந்த யானை மாதிரிகள் குறித்த வீடியோவை சனிக்கிழமை பகிர்ந்துள்ளார். முதுமலை தேசிய பூங்காவில் வாழும் உண்மையான யானைகளின் மாதிரியாக இந்த பிரதிகள் உருவாக்கப்பட்டதாக ட்விட்டரில் உள்ள வீடியோவில் சாஹு விளக்குகிறார்.

அந்த வீடியோவைப் பகிர்ந்து, ​​“முதுமலையைச் சேர்ந்த 70 பழங்குடியினர், பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள காடுகளில் பரவியிருக்கும் ஆக்கிரமிப்பு இனமான லந்தானா களையிலிருந்து இந்த அழகான யானைகளை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 1200 ஹெக்டேர்களில் லாந்தனா, ப்ரோசோபிஸ் மற்றும் பிற ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம் #TNForest”, என்று சுப்ரியா சாஹூ பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் கருத்து தெரிவித்த ட்விட்டர் பயனர் ஒருவர், “இது பாராட்டத்தக்க முயற்சி! சரியான நோக்கங்கள் மற்றும் சமூகத்துடனான ஈடுபாட்டுடன், நமது சிக்கலான பாதுகாப்புச் சவால்கள் பலவற்றை நிலத்தில் தீர்க்க முடியும். யானைகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதைப் பகிர்ந்ததற்கு நன்றி @supriyasahuias”. என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவு, “அருமையான வேலைப்பாடு மேடம். இது அற்புதம்.. அதன் நேர்த்தியை பராமரிக்க வேண்டும். அந்த மக்கள் கழிவுகளை செல்வமாக மாற்றும் கலையை நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tribals in tamil nadu make elephant models out of invasive weeds

Best of Express