பாகுபலியாக மாறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; வைரல் வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வர உள்ள நிலையில், டிரப்பை பாகுபலியாக சித்தரித்த வீடியோ கிளிப் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியாவுடனான தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.

donald trump, donald trump in india, டொனால்ட் டிரம்ப், பாகுபலி 2 வீடியோ, baahubali video, donald trump baahubali song video, donald trump india visit, டிரம்ப் இந்தியா வருகை, பாகுபலி டிரம்ப், trump india visit, trump modi meeting
donald trump, donald trump in india, டொனால்ட் டிரம்ப், பாகுபலி 2 வீடியோ, baahubali video, donald trump baahubali song video, donald trump india visit, டிரம்ப் இந்தியா வருகை, பாகுபலி டிரம்ப், trump india visit, trump modi meeting

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வர உள்ள நிலையில், டிரப்பை பாகுபலியாக சித்தரித்த வீடியோ கிளிப் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியாவுடனான தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் டிரம்ப் பிரதமர் மோடியுடன் சந்தித்து சில வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். மேலும், டிரம்ப் அமெரிகாவின் முதல் பெண்மணியான தனது மனைவியுடன் சேர்ந்து ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கிறார். அதோடு, குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பிரம்மாண்டமான விளையாட்டு மைதானத்தை திறந்துவைக்கிறார்.

இந்த நிலையில், sol என்ற டுவிட்டர் பயணர், பாகுபலி – 2 திரைப்படத்தில் பாகுபலியாக நடித்த பிரபாஸ் முகத்தை மறைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முகத்தை வைத்து பாகுபலி பிரபாஸை பாகுபலி டிரம்ப்பாக சித்தரித்துள்ளனர். அதே போல, ராஜமாதா சிவகாமி வேடத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன் முகத்தில் டிரம்பின் மனைவி அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியாவின் முகத்தை பொருத்தி கிராஃபிக்ஸ் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த கதாநாயகன் தீயவைகளை அழிப்பான். நாம் அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த வீடியோவை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியாவில் எனது சிறந்த நண்பர்களுடன் இருப்பதை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, டிரம்ஃப் பாகுபலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 திரைப்படம் 2017-இல் வெளியாகி இந்தியா முழுவதும் ரூ.800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ரூ.200 கோடி வசூலித்தது. இதன் மூலம் பாகுபலி 2 திரைப்படம் ரூ.1000 கோடி வசூலித்து இந்திய சினிமாவில் அதிக அளவு வசூலித்த திரைப்பட என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இந்தியா வருவதற்கு முன்பு அவரை பாகுபலியாக சித்தரித்த வீடியோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trump shares morphed baahubali 2 video clip goes viral

Next Story
உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணி… பேஸ்புக்கில் ராஜினாமா கடிதத்துடன் பதவி விலகிய டாக்டர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com