ரஷ்யா, ஜப்பானில் சுனாமி தாக்குதல்: திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய காட்சி: வைரல் வீடியொ

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி அலைகள் உருவாகி, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளைத் தாக்கின.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி அலைகள் உருவாகி, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளைத் தாக்கின.

author-image
WebDesk
New Update
Japan tsunami 1

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு பாதிக்கப்படும் பல நாடுகளுக்கு எச்சரிக்கைகளை வெளியிட்டது. Photograph: (Image source: X)

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி அலைகள் உருவாகி, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளைத் தாக்கின. ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் சுமார் 30 சென்டிமீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் வந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இந்த இயற்கை சீற்றத்தால், ரஷ்யாவின் கம்சட்காவில் ஐந்து பெலுகா திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீட்புப் படையினர் காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

வீடியோக்களைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

 

 

 

 

 

 

 

 

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு:

அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அமைப்பு பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் ஈக்வடார் கடற்கரைப் பகுதிகளில் 3 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஹவாய், சிலி, மற்றும் சாலமன் தீவுகளில் 1 முதல் 3 மீட்டர் வரை அலைகள் எழ வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும் சிறிய அளவில் கடல் அலைகள் எழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின் காரணமாக, ஹவாயில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி கண்காணிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானும் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: