Planes damaged by the storm, Viral Video, துருக்கி, விமானங்களை இயங்க விடாத சூறைக் காற்று
துருக்கியில் ஏற்பட்ட பலத்த சூறைக்காற்று, விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களை சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
துருக்கி நாட்டிலுள்ள அண்டால்யா மாகாணத்தில் ஏற்பட்ட பலத்த காற்று விளை நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தியதோடு, அண்டல்யா சர்வதேச விமான நிலையத்தின், ஓடு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களை தள்ளும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் ஒனூர் ஏர், கொரெண்டான் ஏர்லைன் ஆகிய விமானங்கள் பலத்த சேதமடைந்ததாக ஏர்லைவ்.நெட் (AirLive.net) இணையதளம் தெரிவித்துள்ளது. பெரிய விமானங்கள் எவ்வாறு அந்த பலத்த காற்றால் பாதிக்கப்பட்டன என்பதை வீடியோ காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த சூறைக்காற்றால், நிறைய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மற்றவைகள் 10 மணி நேரத்துக்கும் அதிக தாமதமாக சேவையைத் துவங்கின. தவிர 12 பேரை காயப்படுத்தி, பேருந்துகளின் கூரைகளையும் பதம் பார்த்து விட்டுத் தான் சென்றது இந்த அதி தீவிர காற்று.