ஓட்டப்பந்தய நிகழ்ச்சியினை டிவி நேரலையில் விளக்கிக்கொண்டிருந்த பெண் நிகழ்ச்சியாளரின் பின்பகுதியில் போட்டியாளர் ஒருவர் தட்டிய வீடியோ, வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில், கடந்த சனிக்கிழமை ஓட்டப்பந்தய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஓடினர்.
இந்த ஓட்டப்பந்தய நிகழ்ச்சியினை அலெக்ஸ் போஜர்ஜியான் என்ற பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர், டிவி நேரலையில் செய்தியாக வழங்கிக்கொண்டிருந்தார். வீரர்கள் பலரும், கேமரா முன்பு கையை அசைத்தபடியும், சிரித்தபடியும், சத்தம் எழுப்பியபடியும், அந்த இடத்தை கடந்து கொண்டிருந்தனர். போஜர்ஜியானும் தொடர்ந்து ஓட்டப்பந்தய நிகழ்வுகள் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்ட வீரர் ஒருவர், போஜர்ஜியானின் பின்புற பகுதியில் தட்டிவிட்டு சென்றார். இதனால், சிறிதுநேரத்தில் போஜர்ஜியான் தடுமாறிவிட்டார். பின் சுதாரித்துக்கொண்டு மீண்டும் செய்திகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த ஈன செயலை செய்த வீரருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.